சந்தானம் நடிக்கும் ‘ சக்க போடு போடு ராஜா’ 

மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் VTV  கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் . ” சக்க போடு போடு ராஜா ” .  
 
கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில்  படமாக்கபட்டது.
முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குநர்களான 
ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி 
ஆகியோர் இப்பாடலுக்கு பணியாற்றினார்.
                            “கலக்கு மச்சா டவுளத்துள 
                             கால  வாரும் காலத்திலே 
                             கலங்க நா கோழையில்லே “
                             களத்தில இறங்கி காளபோல 
                             ரைட்டு தாட்டு உள்ளத்திலே
                             வெச்சு இருக்கும் நல்ல புள்ள
 
STR  இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத்  பாடினார் .
 
நவம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தை G.L.சேதுராமன் இயக்கத்தில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படதொகுப்பை ஆன்டனி ஏற்று பணியாற்றியுள்ளார் .முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,VTV கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தில் STR இசையில் ,யுவன் ஷங்கர் ராஜா ,டி.ராஜேந்தர் , உஷா ராஜேந்தர்  ஆகியோர் பாடியுள்ளனர்  .
 
நவம்பர் 14 தேதி  சத்யம் திரை அரங்கில் பிரமாண்டமான இசை விழாவில் அனைத்து 
 திரைஉலகினர் பங்கேற்க இனிதே  நடைபெறவுள்ளது .
 
Pin It

Comments are closed.