‘போஸ்பாண்டி ‘ செய்த பொறுப்பான சேவை!

bose-pandi1சரவணன் என்கிற சூர்யா -என்கிற பெயர்வைக்கப்பட்ட  ‘போஸ்பாண்டி ‘படக்குழுவினர் – சூர்யா ரசிகனை மைய கதாப்பாத்திரமாக கொண்டு படம் எடுத்தாலும், உலக அளவில் ரசிகர்களை பெற்ற சூப்பர் ஸ்டார் – ரஜினிகாந்த் பிறந்த நாளன்று அவரது பெருமையை பறை சாற்றும் வகையில் சென்னை வேப்பம்பட்டில் உள்ள பாலவிகார் சிறப்பு திறன் பெற்ற குழந்தைகளுக்கான மையத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அன்றைய தினம் அனைவருக்கும் இலவச உணவு பரிமாறி உள்ளார்கள். அங்குள்ள அனைவரும் ரஜினி ரசிகர்கள் என்று கூறியதில் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த இவர் லிங்கா திரைப்படத்தை  முதல் நாள் முதல் ஷோவை தன் படக்குழுவினருடன் பார்த்து ரசித்தாராம்.தனது அடுத்த படத்திற்கு  இந்த ராஜா சுப்பையா சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த் பெயர் வைக்காமலிருந்தால் சரி ?.
bosepandi-2