சர்வதேச விழாவில் கபிலன் வைரமுத்து பங்கேற்பு!

kabilan-vசர்வதேச விழாவில் சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம்தமிழகத்தின் சார்பாக கபிலன்வைரமுத்து பங்கேற்கிறார்.

வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாதெமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன்வைரமுத்துவும் கவிஞர் ரவிசுப்ரமணியமும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இலக்கியவாதிகளும் அனுபவம் மிக்க எழுத்தாளர்களும் தங்கள் கவிதைகளை மேடையேறி பகிர்ந்துகொள்கிறார்கள்.

மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். கொச்சி எர்னாகுளத்தில் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் சர்வதேச புத்தகத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம் கருதப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.