சவுகார் பேட்டையில் மாயா பேயாக ராய்லஷ்மி!

laxmiroy11மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று  நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை –  ஜான்பீட்டர்

ஒளிப்பதிவு    –     சீனிவாசரெட்டி

பாடல்கள்      –     நா.முத்துக்குமார், விவேகா

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான்.

தயாரிப்பு   –  ஜான்மேக்ஸ்

படத்தை பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டோம்…

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். அதில் ஒரு கதாப்பாத்திரம் மந்திரவாதி. ராய்லஷ்மி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் முதன் முறையாக ராய்லஷ்மி மாயா  என்ற பேய் வேடத்தில்  நடிக்கிறார். பேய் பிடித்து தானும் ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் ஏற்கிறார்.

படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.