சிங்கப்பூரில் நடைபெறும் SIIMA விழாவில் வெளியாகிறது ‘ரெமோ’ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடல் !

sivakarthikeyan759குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பாராட்டக்கூடிய நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், துறுதுறுவென பேசி பழகும் குணத்தினாலும், நம் குடும்பங்களில் ஒரு நபர் போல சிவகார்த்திகேயன் எல்லோர் மனதிலும் பதிந்துவிட்டார்.
வர் நடிப்பில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் ‘ரெமோ’ திரைப்படமானது, ஆரம்ப நாட்களில் இருந்தே ஏகப்பட்ட வரேவேற்பை பெற்று வருகிறது. சமீபகாலமாகவே சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வெற்றி கூட்டணிதான்  ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. ஏற்கெனவே வெளியான ‘ரெமோ’ படத்தின் முதல் போஸ்டரானது இளைஞர்கள மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், ‘ரெமோ’ படத்தின்  ‘செஞ்சிட்டாளே’ பாடலை சிங்கப்பூரில் நடைப்பெறும் SIIMA விழாவில் வெளியிட ‘ரெமோ’ படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அனிரூத்தின்  இசையில் உருவாகியுள்ள இந்த பாடல், ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜூலை 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த ரெமோ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடல் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் பாக்யராஜ், இசையமைப்பாளர் அனிரூத், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம், ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என ஒட்டுமொத்த படக்குழுவினரும் பங்குபெறுவது, மக்களின் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.