சினிமா தயாரிக்கும் சிம்ரனின் கணவர்!

deepak44நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, வெள்ளித்திரையில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக “சிம்ரன் & சன்ஸ்” (Simran & Sons) எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ள தீபக் பாகா, தனது முதல்படத்தின் தயாரிப்பு வேலைகளை பரபரப்பாக தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக படத்திற்கான இயக்குனராக அவரால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் கௌரிசங்கர். இவர் பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரபல நட்சத்திரங்களை கொண்டு எண்ணற்ற விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். கௌரிசங்கர் இயக்க உள்ள பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் தீபக் பாகா, திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் தன்னுடன் திருமண பந்தத்தில் இணைந்த சிம்ரன், தனது முதல் தயாரிப்பான புதியபடத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், தீபக் பாகா.

தனது புதிய படத்தின் பெயர், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தீபக் பாகா.