சின்னத்திரை நடிகர் சங்கம்: புதியநிர்வாகம் புதிய திட்டங்கள்

IMG_5456சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா  ஜெர்மன்ஹாலில் நடைபெற்றது சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று தலைவராக நடிகை கே.நளினி, செயலாளராக பூவிலங்கு மோகன்,பொருளாளராக தினகரன், துணைத்தலைவராக மனோபாலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். .

மேடையில் பெரும்பகுதி பெண் நிர்வாகிகளே ஆக்கிரமித்திரு ந்தது புதிய மாற்றம்.

சங்கத்தின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் டப்பிங் தொடர்களை நிறுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது , உறுப்பினரல்லாதோர் தொடர்களில் நடிக்க அனுமதிக்க மறுப்பது, சங்க உறுப்பினர் களின் பிரச்சினையின் உண்மைத் தன்மையை அறிந்து தீர்ப்பது, அதே சமயம் தயாரிப்பாளர்கள், சேனல்களுடன் நல்லுறவைப் பராமரிப்பது,

பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றப் பாடுபடுவது, சொந்த அலுவலகத்துக்கு ஏற்பாடு செய்வது, பொறியியல் கல்லூரியில் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இடமும் கல்வியும் அளிக்க உதவுவது.

உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு10வது 12வது படிப்பில் முதலிடம் பெறுவோர்க்கு ரொக்கப் பரிசு வழங்குவது.

மருத்துவ சேவை, காப்பிட்டு சேவை போன்றவை பெற்றுக் கொடுப்பது ,திருமணம், முதியோர் போன்ற விஷயங்களில் அரசின் திட்டங்கள் பெற்றுத்தர உதவுவது போன்றவை செயல்திட்டங்களாக வரையறுத்து செயல்படுத்தப் படவுள்ளன.