சிருஷ்டிடாங்கே கவர்ச்சியில் கலக்கும்’ ஒரு நொடியில்’

srushty44நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார்  பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படத்திற்கு “ ஒரு நொடியில் “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர்மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா சிவா, கீர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   மகிசரலா

இசை  –  சாய்பர்வேஷ்

பாடல்கள்  –  சூர்யா

தயாரிப்பு    –  கே.கோடீஸ்வரராவ்

எழுதி இயக்குபவர் எம்.ஏ..சௌத்ரி. இயக்குநர் சௌத்திரியிடம் படம் பற்றி கேட்டோம்.

ஒரு கிராமத்தில் வெளி ஆட்களோ, போலீஸோ நுழைய முடியாது. மீறி நுழைபவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு காரணமாக சொல்லப்பட்டது தான் விசித்திரமாக இருந்தது.

500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் ஆவி இன்னமும் இந்த ஊரில் பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள். அது உண்மையா இல்லையா? என்பது கதை!

படத்தில் ஏறக்குறைய 80 நிமிடத்திற்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது.

திகில் மற்றும் ஹாரர் படமாக “ ஒரு நொடியில் “ உருவாகி உள்ளது.