சிருஷ்டி டாங்கே சின்ன விழியழகியா? கன்னக்குழியழகியா?

srusty1இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான’ யுத்தம் செய் ‘திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டிடாங்கே. அதனைத் தொடர்ந்து வெளிவந்த ‘மேகா’ திரைப்படம் ரசிகர்களின் பார்வையை இவர்பக்கம்திருப்பி, யார் இந்த சின்ன விழியழகி ,யார் இந்த கன்னக்குழி அழகி என்றுஅனைவரையும் பேசவைத்தது. அதுமட்டுமல்லாமல் மேகா திரைப்படத்தில் இவரதுநடிப்பு தமிழ் சினிமாவில்இவருக்கென ஒரு தனி அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.

அதன்பின்னர்டார்லிங்,எனக்குள்ஒருவன்,புரியாதஆனந்தம்புதிதாகஆரம்பம்என வரிசையாகஇவரதுபடங்கள்வெளிவந்தன. தற்போது சிருஷ்டிடாங்கே இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகிகொண்டிருக்கும் வில்அம்பு, நடிகர் நரேனுடன் கத்துக்குட்டி, ம.க.பாஆனந்துடன் நவரசதிலகம், விஜய்வசந்துடன் அச்சமின்றி மற்றும் பிரசன்னா- கலையரசன் சேர்ந்து நடிக்கும் இதுவரை பெயர் சூட்டப்படாத ஒரு திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

ஆனாலும் இதுவரை தனிப்பட்டமுறையில் பத்திரிக்கையாளர்களைச்சந்திக்காதசிருஷ்டிடாங்கேதற்போது அவரதுநன்றியை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்குதெரிவிக்க விரும்பியே இந்தஅறிக்கையை வெளியிடுகிறார்.

”.தமிழ்சினிமாவில் என்னைஇந்தஅளவுக்குஉயரசெய்தபத்திரிக்கைமற்றும்ஊடகநண்பர்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதுவரை உங்களை தனிப்பட்டமுறையில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.ஆனால விரைவில்உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாடும் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதற்கான அழைப்பு உங்களைத் தேடிவரும் . இனி என்னைப் பற்றிய தகவல்களையும் எனது திரைப்படங்கள் பற்றிய செய்திகளையும் ஊடக நண்பர்களுக்கு தெரிவிக்க எனது மக்கள் தொடர்பாளராக நியமித்துள்ளேன் என்பதையும் இந்த செய்தியறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்”என்கிறார்.srushty-cp