பணத்துக்காக நடக்கும் போராட்டம் “சூது வாது”

soodhu-vadhu1உன்னி முகுந்தன், மாதவன் என்ற கதாபாத்திரத்திலும், ராகுல் மாதவ், ஸ்ரீஹரி என்ற கதாபாத்திரத்திலும்

நடித்து உள்ளனர். ஸ்ரீஹரி அவரது அண்ணனை(மாதவன்) தேடி பாங்காக் செல்கிறார். அங்கு ஸ்ரீஹரி

மாதவனை சந்திக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளையும், அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதையும்,

இதில் காதல், துரோகம், சூது மற்றும் பணத்திற்க்காக நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து

சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் பாங்காக்கில்

படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம்.

சூது வாது திரைப்படத்தில் ராகுல் மாதவ், உன்னி முகுந்தன், மற்றும் ரிச்சா பனாய் மற்றும் பலர் நடித்து

உள்ளனர்.இந்த படத்தை பிரமோத் பப்பன் இயக்கியுள்ளார். இந்த படத்தை சிவம் மூவிஸ் S.மணி

சீடன் & திகார் ஆகிய படங்களில் கதாநாயகனாக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். ஜூனியர் NTR ன்

ஜனதா கேரேஜ் திரைப்படத்தில் அவருக்கு இணையான கதாபாத்திரத்திலும், அனுஷ்காவுடன் மற்றும்

ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

svஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மற்றும் 100 days of love என்ற படத்தில் நடித்துள்ளார்.

ரிச்சா பனாய் வாடாமல்லி (மலையாளம்) என்ற படத்திற்கு சிறந்த அறிமுக நாயகிக்கான விருதை

பெற்றுள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகன் அல்லரி நரேஷ்வுடனும், கன்னடத்தில் முன்னணி

கதாநாயகன் ஸ்டார் கணேஷ்வுடனும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ஹிந்தி திரைப்படம்

100 Days of Love ல் கதாநாயகியாக நடித்தது குறிப்பிட்டதக்கது. சூது வாது திரைப்படத்தின் படப்பிடிப்பு

முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப்படத்தின்

ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு விரைவில் பிரம்மாண்டமாக நடை பெறவுள்ளது.