‘சிவலிங்கா’ விமர்சனம்

lawrence-slபெரிய வெற்றி பெற்ற  ‘சந்திரமுகி’  யைப் போல சஸ்பென்ஸ் திரில்லர் கதையை   ‘சிவலிங்கா’  வாகப் படமாக்கியுள்ள்ளார் இயக்குநர் பி.வாசு  .

ஓடும் ரயிலில் ஒரு கொலை நடக்கிறது. கொலையுண்டவர் சக்தி. நடந்த அக் கொலைச் சம்பவத்தைத் தற்கொலை என்று கூறி  நீதிமன்றம் வழக்கை முடித்து விடுகிறது.

சக்தியின் காதலி இது கொலை தான் என்று உறுதியாகக் கூறி இந்த வழக்கிற்கு மறுவிசாரணை கோருகிறார். அதன்படி சிபிசிஐடி அதிகாரியான லாரன்ஸ் இந்த வழக்கை விசாரிக்க, கொலையாளி பிடிபட்டானா, கொலைக்கான காரணம் என்ன, என்பதே ‘சிவலிங்கா’ படத்தின் கதை.

sivalinga44சஸ்பென்ஸ், திரில்லர், திகில், கமர்ஷியல், காமெடி என்று அத்தனை அம்சங்களும் உள்ள படம்.அதே அக்மார்க் ‘சந்திரமுகி’ முத்திரைப் பி.வாசுவின் படம்.அதில் வரும் பேய் தெலுங்கு பேசும். இதில் இந்தி பேசுகிறது.
லாரன்ஸ், இந்தப் படத்திலும் நன்றாகவே நடனம் ஆடுகிறார். நடிப்பு சுமார்தான்.எப்போதும் போல மாற்றுத்திறனாளிகள் படை சூழ ஒரு பாடலில் வருபவர், தன்னை தலைவா என்று அழைப்பது போதாது என்று, தற்போது ‘குட்டி கபாலி’ என்று அழைக்கச் சொல்கிறார்.

ரித்திகா சிங் தான் நாயகி .ஆண்மையான நடையோடு வரும்  அவர் , பேயாக நடிப்பதால் நம்ப முடிகிறது. மிகை ஒப்பனை  போட்டு நம்மை பயமுறுத்தும் அவர்,சில இடங்களில் மட்டுமே நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆங்காங்கே காமெடி வெடிகளை கொளுத்தியிருக்கிறார் வடிவேலு. அவருக்காகவே உருவாக்கப்பட்ட அந்த் திருடன் செயல்முறைக்காட்சி செம கலகலப்பு.  சக்தியின் கதாபாத்திரம் சிறியது என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

சக்தி கொலையும், அதற்கான காரணமும், அந்த கொலையாளி கதாபாத்திரமும் தான் கதையின் முக்கிய அம்சங்கள்.

புறா கொலைக் குற்றவாளி குறித்து தடயம் கொடுக்கிறது. ஆனால் இயக்குநர் பெரும்பாலான காட்சிகளில் பேயை  மட்டும் நம்பியே திரைக்கதை அமைத்திருப்பது  தெரிகிறது. பேயை நம்பினார் கைவிடப்படார்.

படத்தின் இரண்டாவது பாதி நீளம் . இதுவே  பலவீனமாகத்தெரிகிறது. மற்றபடி கலகலப்பான பொழுது போக்கான பேய்ப்படம்தான்.

Pin It

Comments are closed.