சிவாஜி என்ன பெரிய நடிகரா?- கல்லூரி விழாவில் தா.பாண்டியன் பேச்சு!

s (5)சிவாஜிகணேசன் என்ன பெரிய நடிகரா? அந்த சிவாஜிகணேசனையே மிஞ்சிய நடிகர்களைப் பார்த்தேன் என்று   அரசியல்வாதிகளைப் பற்றித்

தா. பாண்டியன் ஒரு கல்லூரி விழாவில் பேசினார்.Sivaji-Ganesan

இது பற்றிய விவரம் வருமாறு:

ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமங்களின் நிறுவனர் திரு எம்.ஜே.எஃப்  லயன் லியோ முத்துவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று சென்னை, மேற்கு தாம்பரம் ,ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி  உள்விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பலரும் லியோமுத்து  அவர்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தாபாண்டியன்  பேசும் போது,

“மறைந்தாலும் நெஞ்சங்களில் நீங்காமல் இருக்கும் லியோ முத்து அவர்களின் ஆற்றல் மிக்க சேவையை  இங்கே நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். இக்கல்லூரி வளாக மத்தியில்  நினைவுச் சின்னம் அமைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.

இங்கே இந்த அரங்கில் இரு பெரிய இந்தியர்களின் படங்களை பார்க்கிறோம். ஒன்று, அப்துல்கலாம் அவர்கள், இன்னொன்று லியோ முத்து அவர்கள். இருவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள்.

s (1) லியோ முத்து அவர்கள் சொந்த உழைப்பில் உயர்ந்து சாதனை செய்தவர். அவர் ஒரு தனக்காரராக இருந்ததை,அதிலும் ஒரு  வள்ளலாக இருந்ததை  கம்யூனிஸ்ட் ஒருவர் ஒப்புக் கொள்வீரா? அதைப்பற்றி எழுதுவீரா? என்று  என்னிடம் கேட்கிறார்கள். நிச்சயம் அவரைப்பற்றி சொல்லுவேன். நிச்சயம் அவரைப்பற்றி எழுதுவேன் அவர் உண்மையைத் தேடுவர்.  உண்மையைத் தேடுவர்கள்தான் உலகில் வெற்றி பெறுவார்கள் உதாரணம். 1 கலாம். 2. லியோ முத்து.

அப்துல்கலாம் இந்தியா போற்ற உயர்ந்தார் உலகம் போற்ற உயர்ந்தார். . அவர் மறைந்த போது பலரும் கண்ணீர் விட்டார்கள். இருக்கிற போது அங்கீகரிக்காதவர்கள். பலரும்  அப்போது கண்ணீர் விட்டார்கள். அப்போது அவர்கள் நடித்த நடிப்பு இருக்கிறதே சிறந்த நடிகர் எவரும் நடிக்காத நடிப்பு.

கலாம் எந்தக் கட்சியும் சாராதவர். பலகட்சிகள் ஆதரவுடன் ஜனாதிபதி ஆனவர். அவர் ஜனாதிபதியாக ஆச்சரியமாக  வாஜ்பாய் முன்மொழிய சோனியா வழி மொழிந்தார்.

அப்படிப்பட்டவர்  ஜனாதிபதியாக வேண்டும் என்றெல்லாம்  விரும்பியதிலை. அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின்  துணை வேந்தராக  வேண்டும் என்று மட்டும் விரும்பினார்.  சென்னை பல்கலைக் கழகம் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அது தன் ஜீவசக்தியை இழந்த போது அதை  மீட்க விரும்பினார். ஆனால்ஆளுங்கட்சியினர் அவர் பெயரை பரிசீலிக்காமலேயே நிராகரித்தனர்.  அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்ற போது பா.ஜ.க. ஆதரித்தது சோனியாவும்  ஏற்றார். லாலு ,முலாயங் கூட   மனசார ஏற்றார்கள். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள்தான் மௌனமாக இருந்தார்கள். இவ்வளவும் செய்து விட்டு  சிவாஜிகணேசனைவிட சிறந்த நடிகர்களாக நடித்தார்கள்.,கண்ணீர் விட்டார்கள்.அப்போது சிவாஜிகணேசன் என்ன பெரிய நடிகரா?  அவர்களை அந்த சிவாஜிகணேசனையே  மிஞ்சிய நடிகர்களாகப் பார்த்தேன்.அப்படிக் கண்ணீர் விட்ட அவர்களை நினைத்து நான் கண்ணீர் விட்டேன்.

அது மாதிரி  இன்னொன்றைச் சொல்ல வேண்டும்..லியோ முத்துவின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் 30 ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ளது. அங்கு லியோ முத்து பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொடுத்த இடத்தை ஏற்க மறுக்கிறார்கள் .இதில் என் கட்சியும் தவறு செய்தது. கொடுப்பதை ஏற்றுக் கொண்டால் என்ன?  மனமுவந்து கொடுப்பதில் அரசியல் பார்வை பார்க்கிறார்கள்.

தமிழ்நாடு டிஜிட்டல் நூலகத்திற்காக முத்து 50 லட்சரூபாய் பணமும் 5 ஏக்கர் நிலமும் லியோ முத்து கொடுத்திருக்கிறார். அதை ஏற்க மறுக்கிறார்கள். இதை முதல்வரைச் சந்தித்த போது கூட கேட்டேன். காரணம் என்ன என்று விசாரித்த போது இவர் இன்னொரு கட்சிக்காரரின் சம்பந்தியாம். .இதுதான் நம் அரசியல் நிலை. ‘கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூம் உண்பதூம் இன்றிக்கெடும்’ அல்லவா? கொடுப்பதைக் கெடுக்கலாமா?

100 ஆண்டுகள் தாண்டியும் ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று உலகம் சொல்லும். காலம் கடந்து லியோமுத்துவின் புகழ்  நிலைத்து நிற்கும்” இவ்வாறு தா. பாண்டியன் பேசினார் .

s (4)இவ்விழாவில் முன்னதாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய  ஸ்ரீசாய்ராம் கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரியும் லியோ முத்துவின் மகனுமான சாய்பிரகாஷ் பேசும் போது ,

” நான் என் அப்பாவுக்கு, அந்த மாமனிதருக்கு மகனாகப் பிறந்ததில் பெருமைப் படுகிறேன். அவர் இருக்கும் போது அவரது அருமை தெரியவில்லை. பெருமை பெரிதாகப் புரியவில்லை. அவர் மறைந்த பிறகு ஓராண்டில் எல்லாம் புரிந்தது. அவர் இல்லாத போது தெரிந்தது. தந்தையில்லாத தனையனாக  இக்கட்டுகள் பலவற்றை நான் சந்தித்தபோது  ஆர்.எம்.கே. குழும முனிரத்னம்  அவர்கள் எனக்கு நண்பராக, தந்தையாக இருந்து வழிகாட்டினார்.

1989-ல் தொடங்கிய எங்கள் கல்லூரி தொடர்ந்து டாப் டென்னில் இடம்பெற்று வருகிறது.இது தனிமனித சாதனையல்ல.எங்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் இணைந்து இதைச் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு  என் நன்றி. ” என்றார்.

இவ்விழாவில் லியோ முத்துவின் துணைவியார் கலைச்செல்வி லியோ முத்து, மகள் சார்மிளா ராஜா, ஆம் எம்.கே கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆர்.எஸ்.முனிரத்னம், ஜெயா கல்விக்குழும நிறுவனர் டாக்டர் ஏ.கனகராஜ் ,’மக்கள்டிவி’ சி.ஆர். பாஸ்கரன்,டாக்டர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் ,அகரம் பவுண்டேஷன் ஜெயஸ்ரீ,

நடிகர் மயில்சாமி, கல்வியாளர் ஜெயப்ரகாஷ் காந்தி,  மற்றும் பல்வேறு  கல்விநிறுவனங்களின் முதல்வர்கள்,  ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனபேராசிரியர்கள் ,துறை நிபுணர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

லியோமுத்து அறக்கட்டளை சார்பாக 2014–15 ஆண்டில் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 27,15,000 வழங்கப்பட்டது. இந்த 2015—16ஆண்டில்  ஐம்பது லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில் அகரம் பவுண்டேஷன் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை மாணவர்கள் 10 பேரின் கல்லூரிக் கல்விக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று உதவி வழங்கப்பட்டது. பல்வேறு அனாதைஇல்லங்களைச் சேர்ந்த 1300 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.