சுந்தர்.சி, விஷால் இடையில் நான் செல்ல விரும்பவில்லை:குஷ்பூ

விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள’. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, kushbu6பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர்.

சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

‘ஆம்பள’ பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர்அன்புச் செழியன் ஆகியோர் பாடல்களை வெளியிட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் ஆர்யாவும் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் குஷ்பூ பேசும் போது“எனக்கு விஷாலை நீண்டநாட்களாகத் தெரியும். நடிக்க வரும் போதே தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்தை என் கணவர் சுந்தர்.சி இயக்கும்போது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். நான் போனால் கூட யாரோ மாதிரி என்னைப் பார்க்கும் அளவுக்கு ;நெருக்கமான நண்பர்களாகி விட்டார்கள்… சுந்தர்.சி, விஷால் இடையில் நான் செல்ல விரும்பவில்லை.  நான் போனால் அவர்கள் சுதந்திரம் கெட்டுவிடும் என்று படப்பிடிப்பு பார்க்கக் கூட நான் போகவில்லை.இந்த நட்பால்  அவர்கள் சௌகரியமாக உணர்ந்தார்கள். அதனால் இலகுவாக வேலைபார்க்க முடிந்தது.

எல்லாப் படத்தைவிட ஹன்சிகா இந்தப்படத்தில் அழகாகத் தெரிகிறார். பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வருகிறது.நிச்சயம் இது ஒரு பொங்கல் கொண்டாட்டம்தான். இப்போது சுந்தர்.சியின் மனைவி என்பதில் பெருமைப் படுகிறேன். “என்று கூறி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் விஷால், வைபவ் ரெட்டி, சதிஷ், நடிகை ஹன்சிகா, இயக்குநர்கள் சுசீந்திரன், திரு, தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன்,  முருகராஜ், கே.ஈ ஞானவேல்ராஜா இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோரும் பேசினார்கள்.
Pin It

Comments are closed.