சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் இயக்கும் ‘சதுரன்’

mr28.9குபேரன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக  குபேரன் பொன்னுசாமி தயாரிக்கும் படம் “ சதுரன் “  இந்த படத்தில் மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜ் நாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகியாக வர்ஷா மலேத்திரியா நடித்திருக்கிறார்.                                                    மற்றும் காளி வெங்கட், பாவாலட்சுமணன், அத்திக் அஹமது, தமிழ், ராஜுஈஸ்வரன், கயல் தேவராஜ் , கெளதம் கிருஷ்ணா, உமாமகேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –   மோனிக் குமார் ( இவர் ஷிலம்டாக் மில்லினர் படத்தின் துணை    ஒளிப்பதிவாளர் )                                                                                                                                              

இசை           –        ரிஷால் சாய்                                                                                                      

பாடல்கள்             –        யுகபாரதி, முத்தமிழ்,

எடிட்டிங்    –        சுரேஷ் அர்ஸ்                                                                                                            

நடனம்        –        தினா, நந்தா

கலை           –        பழனிவேல்                                                                                                                

ஸ்டன்ட்      –        கணேஷ்குமார்                                                                                                   

தயாரிப்பு    –        குபேரன் பொன்னுசாமி                                                                                                     

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்    –   கே.ராஜீவ் பிரசாத்  .இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் . ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத்தின் மகன் ஆவார்.                                                                                                                       

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது…                                                                                    

மருத்துவத் துறையில் நடக்கும் முக்கியமான பிரச்னை ஒன்றுதான் இந்த படத்தின் மையக் கரு. பியூட்டி பார்லரில் ஒன்றில் வேலை செய்யும் நாயகி வர்ஷா ஆட்டோ ஓட்டும்     நாயகனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகி மருத்துவ ரீதியான பிரச்னை ஒன்றில் மாட்டிக்கொள்கிறார். நாயகன் அவரை இந்த பிரச்னையில் இருந்து எப்படி காப்பாற்றினார் என்பது தான் படத்தின் திரைக்கதை.

இந்த படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடிக்க நாயகன் ராஜாஜ் ஆட்டோ ஓட்ட பயிற்சி எடுத்து படப்பிடிப்பு முழுவதும் அவரே ஆட்டோ ஓட்டி நடித்தார்.

எனது குரு சுரேஷ்கிருஷ்ணாவை போல நானும் ஆட்டோ கதாப்பாத்திரத்தை கையிலெடுத்திருக்கிறேன். அந்த படத்தை போல் இந்த சதுரன் படமும் வெற்றிபெறும் என்று நன்பிக்கையுடன் கூறினார்.  வஜ்ரம் படத்தை தயாரித்த ஸ்ரீ சாய்ராம்  சினிமாஸ்  பட நிறுவனம் தான் இந்த படத்தை  அக்டோபர் மாதம்  உலகம் முழுவதும் வெளியிடுகிறது