சூப்பர் குட் பிலிம்ஸின் 87வது படம் லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

lawrence5பல வெற்றி படங்களைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “ மொட்ட சிவா கெட்ட சிவா “ என்று பெயரிட்டுள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது.

உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் கல்யாண் ராம் நடித்து சூப்பர் ஹிட்டான “ பட்டாஸ் “ படத்தின் ரீமேக் இது. ராகவா லாரன்ஸ் நடிக்க வேந்தர் மூவீஸ் தயாரிக்க இருந்த “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் தலைப்பு “ பட்டாஸ் “ படத்தின் ரீமேக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் இயக்குநர் சாய்ரமணி கேட்டுக் கொண்டனர் வேந்தர் மூவீஸ் மதன் அவர்கள் இந்த தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு தலைப்பை வைக்க உள்ளார்.

முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மற்றும் நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சதீஷ் , தம்பிராமய்யா, மனோபாலா, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.                                ஒளிப்பதிவு   – சர்வேஸ் முராரி. இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற பட்டாஸ் என்ற படத்தின் ஒளிப்பதிவாளர்.      வசனம்   – ஜான் மகேந்திரன் , இசை   – அம்ரிஷ். இவர் நடிகை ஜெயசித்ராவின் மகன் .கலை – செல்வகுமார் , எடிட்டிங்   – பிரவீன்.கே.எல் .   ஸ்டன்ட்   – கணேஷ். இவர் சிறுத்தை படத்திற்கு ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர்.

திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – சாய்ரமணி . இவர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கியவர்.

தயாரிப்பு   – ஆர்.பி.சௌத்ரி.படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் தேதி சென்னையில் துவங்கி முப்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் ஹைதராபாத், ஹாங்காங்,சுவிட்சர்லாந்து போன்ற இடங்களிலும் படமாக்கப் பட உள்ளது.