சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி!

lyca111சென்னை வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்து கோடி லைக்கா குழுமம் வழங்கியது!
லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றிப் படமான ‘கத்தி’யைத் தொடர்ந்து இந்தியத் துணைக்கண்டத்தின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதும் வகையில் ‘2.0 ‘ ( 2.ஒ) படம் உருவாகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் இணைந்துள்ள 2.0  ( 2.ஒ) திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது..  மிகவும் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,பாலிவுட் சூப்பர் ஸ்டார்  அக்ஷய் குமார் என இந்தியாவின் இரு பெரும் சிகரங்களை ஒருங்கிணைத்து இமாலய முயற்சியாக பெரும் பொருட் செலவில் 2.O ( 2.ஒ)  படத்தை தயாரிக்கிறார்கள்.

இப் படத்தின் துவக்க விழாவை மிகவும் பிரம்மாண்டமாகக் கோலாகலமான முறையில் நடத்தவே ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத கன மழையாலும், வெள்ளத்தாலும் மக்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக ஆடம்பர விழா தேவையில்லை என்று ரஜினி கூறிவிடவே இவ்விழா கைவிடப்பட்டது. அதனால் லைக்கா அலுவலகத்திலேயே மிகவும் எளிய முறையில் இதன் பூஜை போடப்பட்டது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ,அக்ஷய் குமார்,ஏமி ஜாக்சன் போன்ற நட்சத்திரங்களுடன்  இயக்குநர் ஷங்கர்  படக்குழுவில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,  ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, கலை இயக்குநர் முத்துராஜ், வசனகர்த்தா – ஜெயமோகன், VFX – ஸ்ரீனிவாஸ் மோகன்,சவுண்ட் டிசைனிங் – ரசுல் பூக்குட்டி,சிறப்பு உடைகள் – மேரி.இ.வாட் / குவண்டம் எபக்ட்ஸ்  எனப் பல திறமைசாலிகள் இப்படத்தில் சங்கமிக்கிறார்கள்

இப்புதிய படத்தின் ரஜினிகாந்த் ,நாயகி எமிஜாக்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதே லைக்கா நிறுவனம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ஜெகன் இயக்கும் “ இக்கா “ என்ற படத்தையும் தயாரிக்கிறது.

தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ராம் சரண் தேஜாவுடன் இணைந்து ‘கத்தி’ படத்தின் ரீமேக்கையும்  லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

பிரமாண்ட பெரிய பட்ஜெட் படங்களையே லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லி வருவதை பொய்ப்பிக்கும் வகையில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் இந்நிறுவனம்  தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு சிறிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது.

இத்தருணத்தில் தமிழக மக்களின் மழை வெள்ளப்பாதிப்பு என்கிற பெரும் துயரத்தில் லைக்கா நிறுவனமும் பங்கெடுக்கும் வகையில் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை செயலாளர் திரு. சண்முகம் அவர்களை லைக்கா நிறுவனத் தலைவர் திரு. சுபாஷ் கரன் அவர்கள் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார் .

லைக்கா தயாரிப்புகள் பற்றிய அறிமுகவிழா இன்று க்ரௌன் பிளாசா ஹோட்டலில் நடை பெற்றது. இவ்விழாவில் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன்,துணைத் தலைவர் பிரேம்,கிரியேட்டிவ் இயக்குநர் ராஜு மகாலிங்கம், லைகா குழுமதைச் சேர்ந்த கருணாமூர்த்தி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pin It

Comments are closed.