சென்னை 376 வது பிறந்த நாள் தெறிக்கும் சென்னை : மாணவர்கள் மத்தியில் மகிழ்திருமேனி

mahizh-redசென்னையின் 376 வது பிறந்தநாள் கல்லூரி மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.கல்லூரி மாணவர்கள் தெறிக்கும் சென்னை என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடினர். இதில் பிரபல தமிழ்த்திரைப்பட இயக்குநர் மகிழ்திருமேனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.மேலும் அவர் பேசியபொழுது சென்னையைப்பற்றி மிகவும் உயர்வாக பேசினார்.சென்னையில் வாழ்ந்த பெருந்தலைவர்கள் பற்றியும், சென்னையை பற்றிய பல அரிய செய்திகளை கூறினார்.அதுமட்டுமின்றி அவர் முழுக்க முழுக்க தமிழில் பேசினார், இது மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே மாணவர்கள் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு சிறப்பு பாராட்டுகளை வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மிக முக்கிய மூன்று அம்சங்களை உருவாக்கியிருந்தனர். அவை சென்னையின் மைய பகுதியின் புகைப்படங்கள், சென்னையின் பெருந்தலைவர்கள் பற்றிய செய்தித்தொகுப்பு ,மற்றும் சென்னையை பற்றிய தீம் சாங் இவற்றையும் இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள்  துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.