ஜனிவா ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் திரையிடப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ ‘

pop1இந்தியாவில் தடை செய்யபட்ட திரைப்படம் ‘போர்க்களத்தில் ஒரு பூ ‘ஜனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில்  அக்டோம்பர் 1ம் தேதி மதியம் ஒரு மணிக்கு திரையிடப்பட்டது.

”இதற்காக கடந்த ஒரு வாரமாக நான் பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பரப்புரை செய்து கொண்டிருக்கிறேன். இப்படம் டெல்லி தணிக்கை குழுவினர் கட்டாயமாக் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக  இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய் வரலாற்று தீர்மானத்தை நீக்க வேண்டுமேன்று சொன்ன காட்சியை நீக்காமலே திரையிடப்படுகிறது. மற்றும்  ஒரு சிலரால் எனக்கு கொலை மிரட்டல்களும் இந்த படத்தை திரையிட்டால் கொல்வோம் என்றும் போனில் மிரட்டுகிறார்கள். எனக்கு என் உயிரை பற்றிக் கவலையில்லை நியாயத்துக்காக மனித நேயத்துக்காக குரல் கொடுப்பவர்கள் எனக்கு ஆதரவு அளித்தால் பொதும் நான் கடைசிவரை போராடுவேன்” என்று ‘போர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இயக்குநர் கு கணேசன் ஜனிவாவில் இருந்து. தெரிவித்திருக்கிறார் .கேள்விகள் இருந்தால் இந்த  தனது எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறார்.

அவரது செல் : 0041779501988