ஜீவாவின் நடிப்பில் ‘கவலை வேண்டாம்’

jeeva-birthdayதிரையுலகில் தங்களது வித்தியாசமான படங்களின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது RS Infotainment தயாரிப்பு நிறுவனம். மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் படங்களையே தேர்ந்தேடுத்து தயாரிப்பதே எண்ணமாய் கொண்டுள்ளனர் என்பதை ‘யாமிருக்க பயமே’ படத்தின் பிரம்மாண்ட  வெற்றி நிரூபித்தது.

‘யாமிருக்க பயமே’ வெற்றியை தொடர்ந்து  இயக்குநர் டிகே இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைபடத்தை தயாரிக்கிறது RS Infotainment.

“மீண்டும் டிகே , RS Infotainment கூட்டணி இணைகிறோம், அதற்கு ‘கவலை வேண்டாம்’ என்பதைக் காட்டிலும் ஒரு தலைப்பு கச்சிதமாய் இருக்குமோ” என்று தயாரிப்பு நிறுவனத்தார் கூறுகின்றனர்.
‘ஜீவாவின் நடிப்பு , டிகே வின் திறமை மற்றும்  சிறப்பு கௌரவ தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹாவின் அட்டகாசமான நடிப்பு என ஒரே  உற்சாக குவியலாக இருக்கும் ‘கவலை வேண்டாம்’. நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.