ஜூலை 3 முதல் பாபநாசம்!

kamal-papaவைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பாக ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து தயாரித்து கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவான படம் “பாபநாசம்”

சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படம் வெளியாகவிருக்கும் அதிகார்ப்பூர்வ தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஒரு குடும்பத்தலைவன் தனது குடும்பத்தை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டும், ஒரு தந்தை தனது மகளை எந்த அளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவரும் தனது குடும்பத்துடன் பார்த்து பார்த்து ரசிக்கும் வண்ணம் “பாபநாசம்” உருவாகியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பாபநாசம் படத்தின் டிக்கெட்களை ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.