ஜோதிகா நடிப்பில் ‘ காற்றின் மொழி ‘

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா PVT தயாரிப்பில் , ராதா மோகன் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள ” காற்றின் மொழி “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது ! 
 
ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ” மொழி “. இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் “ காற்றின் மொழி “ படத்தில் இணைகிறது. இப்படத்தை பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது. 
 
இப்படத்தின் பூஜை படக்குழுவினர் மங்களகரமாக இன்று     நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு மேலும் சிறப்பு சேர்த்தார். இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. அனைத்து நடிகர்களும் இப்படத்துக்குக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளனர். 
 
இப்படத்தில் விதார்த் , லட்சுமி மஞ்சு , M.S. பாஸ்கர் , மனோபாலா , குமாரவேல் , மோகன் ராமன் , உமா  பத்மநாபன் , சீமா தனேஜா , சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 
 
இசை A.H. காஷீப் , பாடல் மதன் கார்க்கி , கேமரா மகேஷ் முத்துசாமி , கலை கதிர் , உடை பூர்ணிமா , எடிட்டர் பிரவீன் KL , வசனம் பொன் பார்த்திபன் , PRO ஜான்சன். 
 
அக்டோபர் 2018 வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.