டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் !

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு
தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சினைகளை அலசிய
முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் டிராஃபிக் ராமசாமியின்
வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். அதை பற்றி அவர் கூறிய

போது “ பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல
வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. அப்படித்
தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி
தீர்ப்புகளையும் வாங்கித் தந்தவர். இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட
அதிகாரிகளும், ரொளடிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது
கோபம் கொண்டு இவரைப் பல வகையில் கொடுமை
படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல முறை டிராஃபிக்
ராமசாமியை கொல்ல முயற்சிகளும் நடைபெற்றிருக்கிறது. அப்படி
இருந்தும் தொடர்ந்து அவர் சமூகத்திற்காக இன்றும் போராடிக்கொண்டே
தான் இருக்கிறார்.

அந்த போராட்ட குணம் என்னைக் கவர்ந்தது. என் உதவி
இயக்குநரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம்
இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே என்னை வைத்து
பலரும் பாராட்டிய நகைச்சுவையான ‘மார்க்’ என்ற குறும்படத்தை
இயக்கியவர்.” என்றார்.

இதைப் பற்றி இயக்குநர் விஜய் விக்ரம் கூறுகையில்
”இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின்
வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனைச்
சம்பவங்களும், திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்திருக்கின்றன.
இந்த படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இப்படத்தை கிரீன் சிக்னல் பட
நிறுவனம் தயாரிக்கிறது.’ என்றார்.

 

Pin It

Comments are closed.