டூமா கோலி திரைப்படத்தின் பூஜை !

அறிமுக இயக்குநர் பாபு இயக்கத்தில் டூமா கோலி திரைப்படத்தின் பூஜை  சென்னை ஏவிஎம்-ல் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார்.

வாழும் தெய்வம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் டூமா கோலி படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பு மேற்பார்வை வந்தனா குணசேகர்.
doomakoli1
டூமா கோலி திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் சாஸ்தா, ஒளிப்பதிவு சலிம்.

படம் குறித்து இயக்குநர் பாபு கூறுகையில்,”” டூமா கோலி படம் மூன்று இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கபடுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இப்படம்  இரண்டு ஷெட்யூலாக எடுக்கப்படுகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னையில்  மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். 2015ம் ஆண்டின் இறுதில் இப்படம் திரைக்கு வரும் “”என இயக்குநர் பாபு கூறினார்