ட்விட்டர் தளத்தில் இணைந்த லாரன்ஸ்!

lawrence5தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார் இயக்குநர் லாரன்ஸ்.

‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் லாரன்ஸ். நடன இயக்குநராக திரையுலகில் நுழைந்து நடிகர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். ‘காஞ்சனா 2’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டர் தளத்தில் லாரன்ஸ் பெயரில் போலி கணக்கு ஒன்று இயங்கி வந்தது. அக்கணக்கு தன்னுடையது இல்லை, போலியாக இயங்கி வருகிறது என்று விளக்கம் அளித்திருந்தார் லாரன்ஸ்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 29) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் லாரன்ஸ், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். https://twitter.com/offl_Lawrence என்ற ட்விட்டர் தளமும், https://www.facebook.com/Raghava-Lawrence-781741278604909​​ என்ற ஃபேஸ்புக் பக்கமும் தனது அதிகாரப்பூர்வ பக்கங்கள் என்று வீடியோ பதிவின் மூலமாக தெளிவுப்படுத்தி இருக்கிறார் லாரன்ஸ்.