ட்விட்டர், பேஸ் புக்கில் இணைந்த ஸ்ரீகாந்த்தேவா!

smile1kபல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டர் பேஸ்புக்கில் இணைய தயக்கம் காட்டினாலும் சிலர் தங்களை இவற்றில் இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக ட்விட்டரில் இணைந்து அவ்வப்போது தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இது நாள் வரை இவற்றில் இணையாமல் இருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இப்போது ட்விட்டர், பேஸ்புக் என இரண்டு சமூக ஊடகங்களிலும் இணைந்து இருக்கிறார்.

அவர் வழக்கமாக எப்போது யாரைப் பார்த்தாலும் கூறும் ஊக்கமும் உந்துதலும் தரும் வார்த்தை ‘ஜெயிச்சிருவோம்’ என்பதைத் தன் ட்விட்டரில் முதல் ட்வீட்டாக தன் படத்துடன் பதிவிட்டுள்ளார். @thesrikanthdeva

ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும்  இணைந்துள்ள அவர்,. இது பற்றி தன் மகிழ்ச்சியை வெளியிட்டு ‘தன் ஸ்மைல் ப்ளீஸ்’ தீம் மூலம் பரப்பி வருகிறார்.

ஹன்சிகாவுடன் இணைந்து முகம் காட்டுகிறார். உலக நாயகனுடன் இணைந்து முகம் காட்டுகிறார்.

https://twitter.com/thesrikanthdeva/status/650545301858615297

இது பற்றி கூறும் போது ” நான் ஒரு சமூக மனிதன். நான் தினந்தோறும் பல பிரபலங்களையும் சாமான்ய மனிதர்களையும் சந்திக்கிறேன். இது சார்ந்த உணர்வுகளை என் நண்பர்களுக்கு பகிர விரும்புகிறேன். நான்முடிகிற அளவுக்கு   பேஸ்புக் மூலம் என் நண்பர்களுடன் குடும்பத்தினருடன். ரசிகர்களுடன் கருத்து பரிமாற விரும்புகிறேன். ” என்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவை பேஸ்புக்கில் நட்பு கொள்ள. https://www.facebook.com/srikanthdevaoffl