தங்கள் நட்பு பற்றிப் பேசி விஜய், விக்ரம் உருக்கம்!

kappal3இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் . சி கிரிஷ் இயக்கும் படம் ‘கப்பல்’ .வைபவ், சோனம் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த ஷங்கர், தானே வாங்கி தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.

படத்தின் ஆடியோ ,ட்ரெய்லர் வெயியீட்டு விழா இமேஜ் ஆடிட்டோரியத்தில் பிரமாண்ட மான முறையில் நடைபெற்றது.

மேடையிலேயே போர்டியத்தில் அமைக்கப் பட்ட சிறு குளத்தில் ஷங்கர் செய்துகாட்டிய சிறு காகிதக் கப்பலை ஏ.ஆர். ரகுமான் மிதக்க விட்டு ஓடவிட்டார். இப்படி காகிதத்தில் கப்பல் செய்து மேடை நடுவே ஓடவிட்டார்கள்.

விழாவில் கலந்து கொண்ட விஜய், விக்ரம் அனைவரும் தங்கள் ப்ரண்ட் ‘ஷிப்’ பற்றி பேசினார்.

ஷங்கருக்கும் தனக்கும் உள்ள நட்பின் வயது 21 என்று ரகுமான் கூறினார்.

”’ஐ’ ,’லிங்கா’, இந்திப்படம், ஹாலிவுட் படம், ஈரான் டைரக்டரின் படம் என்று பிஸியாக இருக்கும் ரகுமான் இங்கு வந்திருப்பது  எங்கள் நட்புக்கு அடையாளம்.விக்ரம் கடின உழைப்பாளி. ‘ஐ’யில் அந்தக் கூனன் கேரக்டருக்கு தொண்டையைப் பிடித்துக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் டப்பிங் பேசியிருக்கிறார்.விஜய் நான் விழாவுக்கு வரக்  கேட்ட போது உடனே ஒப்புக்கொண்டார்.நன்றி.” என்றார் ஷங்கர்.

“ஷங்கர் சார் என் குருநாதர்,நண்பர். .என் நெருங்கிய நண்பர் விக்ரம். நாங்கள் ஓய்வாக இருக்கும் போது அடிக்கடி சந்திப்போம்  எங்கள் குடும்பத்தினரும் நண்பர்கள். என் மனைவியும், அவர் மனைவியும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள்இருவரும் சந்திக்கும் போது  நிறையப் பேசுவோம்.சினிமா பற்றி மட்டும் பேச மாட்டோம்.” என்றார். விஜய்.

விக்ரமோ “நாங்கள் சினிமா பற்றிப் பேசமாட்டோம் தான்.ஆனால் நான் உலகத்திலுள்ள கிசு கிசு வெல்லாம் அள்ளி விடுவேன். அவர் ரசித்து சிறிதாக மட்டுமே சிரிப்பார். நான் அவருடைய நடனம் ,நடிப்புக்கு பெரிய விசிறி .என்பட விழாக்களில் கூட அவர் ஆடிய பாட்டை போடச் சொல்வேன். அதைக் கேட்டாலே பார்த்தாலே புத்துணர்ச்சி வரும் .

ஷங்கர் சார் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் ஜான் கேமரூன்.அவரது விஷனே வேறு.” என்றவர், ரகுமான் பற்றிப் பேசும் போது, “என் புதிய மன்னர்கள் படத்துக்கு இசையமைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து ‘ராவணன்’ படத்துக்கு இசையமைத்தார். அவர் இங்கே இருப்பது மகிழ்ச்சி.நான் அவரது  பெரிய ரசிகன்.”என்றார்.

இப்படி ‘கப்பல்’ ஆடியோ விழா நட்பு பற்றி பேசப்படும் விழாவாக இருந்தது.