
நாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் மனதோடு நேரடி தொடர்பில் இருக்கும். அப்படி அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் ‘ரெமோ’. ஒரு திரைப்படம் என்பதை தாண்டி, மக்களின் ஆழ் மனது வரை சென்று தங்கியிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஜோடி மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்களை இந்த ரெமோ படம் உள்ளடக்கி இருப்பது தான்.

