‘தனி ஒருவன்’ விமர்சனம்

thanioruvan4rsபோலீஸில் ஐபி எஸ் ஆகி நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணும் ஜெயம்ரவி, ஐபி எஸ் படித்துமுடித்து சமூக விரோதிகளை அழிப்பதே கதை.

படிக்கும் போதே தான் யாரென்று காட்டாமலேயே நாட்டுக்காக தீயசக்திகளை பிடிக்க போலீசுக்கு உதவுகிறார் ஜெயம்ரவி. ஐபிஎஸ் ஆகி அரசியல் பின்புலத்துடன் மருந்து ஊழல் செய்யும் அரவிந்தசாமியை எப்படி மோதி வெல்கிறார்  என்பதே கதை.

ஐபி எஸ் மிடுக்குடன் மித்ரனாக ஜெயம்ரவி பொருந்தி இருக்கிறார். அவரது காதலியாக சகமாணவியாக வரும் நயன்தாரா. காதலும் கடமையும் தவறாதவராக வருகிறார்.

வில்லனாக வந்தாலும் சித்தார்த்தாக வரும் அரவிந்தசாமி உடல் மொழி, நடிப்பு, வசனம் என எல்லாவற்றிலும் பார்ப்பவர்களைக் கவர்கிறார்; ரசிக்க வைக்கிறார்.தம்பி ராமையா அரவிந்தசாமியின் அப்பாவாக ,அப்பாவியாக வந்து கலகலப்பூட்டும் விதம் அசத்தல்.அது புதிய குணச்சித்திரமாக மிளிர்கிறது.

எதிரியை கண்டுபிடிக்க தனக்கென ஒரு படையுடன் செயல்படும் ஜெயம்ரவிக்குள் அரவிந்தசாமியின் உளவுக்கருவியான மைக்ரோசிப் தனக்குள் இருப்பதை அறிந்து தனக்கு செக் வைக்கப்பட்டதை அறிந்த ஜெயம்ரவி அதன் பின் நடந்து கொள்வது அனைத்தும் பரபரப்பு.

தனிமனித விரோதம் காட்டும்சாதாரண ஹீரோ வில்லன் கதையைக் சொல்லாமல்  சமூகக் கோபம் கொள்ளும் நாயகனின் கதையைக்கூறி வித்தியாசப்பட்டுள்ளார்  இயக்குநர் மோகன்ராஜா.

இப்படத்தில் திரைக்கதையில் மோகன்ராஜா அபரிமித முதிர்ச்சி காட்டியுள்ளார் .விறு விறுப்பான காட்சிகளில் பாராட்டுகளை அள்ளுகிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவும் ஹிப்ஹாப் தமிழாவின் இசையும் படத்துக்குக்  கூடுதல் பலம்.  இப்படத்தின் மூலம் இதுவரை  ரீமேக்ராஜா வாக இருந்த  மோகன்ராஜா ,தனித்துவம் கொண்ட இயக்குநராக  உருவெடுத்துள்ளார்.