தனுஷுடன் தகராறா : சிவகார்த்திகேயன் மறுப்பு

kakki-3‘மான் கராத்தே’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் 7வது படம் ‘காக்கி சட்டை’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இது ஒரு போலீஸ் கதை.காக்கி சட்டை படம் பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ளது. 370க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.

இதுகுறித்த ஊடக சந்திப்பில்  சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘இந்தப்படம் ஒரு போலீஸ் கதை.இதில் நம்பி என்னை நடிக்க வைத்த     இயக்குநருக்கு நன்றி. அப்பா போலீஸ்அதிகாரியாக இருந்தவர்.படத்தில் காக்கி சட்டை போட்ட போது அவர் நினைவு வந்தது.” என்றவரிடம்    சமீபகாலமாக காக்கி சட்டை படத்தின் புரமோஷன்களில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்றும், தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் என்றும் பல்வேறு செய்திகள் வெளியானதே என்று சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது மறுத்தார்.

”நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. பட புரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளாததற்கு வேறு காரணம் உள்ளது. முதலில் எங்களை தூக்கி விட தனுஷ் வந்தார். தற்போது நாங்கள் வளர்ந்து விட்டதால், உங்களை நீங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி கலந்து கொள்ளவில்லை.’ என்றார்.
kaki-gp

Pin It

Comments are closed.