தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பரப் படம்!

 danush-tataடாடா ஸ்கை, தனது மூன்றாம் கட்ட டிஜிட்டல்மயமாதலை, மிஸ்டு கால் பிரச்சாரம் மூலம் மேற்கொள்ள இருக்கிறது!

பிரபல சினிமா நட்சத்திரம் தனுஷ் நடிக்கும் டாடா ஸ்கை விளம்பர படத்தின் மூலம், வாடிக்கையாளர்களை பழைய அனலாக் முறையிலிருந்து நவீன டிடிஹெச் நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு ஊக்கப்படுத்துகிறார்.

 டாடா ஸ்கை, இந்தியாவின் முன்னணி டிடிஹெச் சேவை நிறுவனம், டிசம்பர் 2015-ல் தனது சேவைகளை டிஜிட்டல்மயமாதலுக்கு (digitization phase III (DAS III))மாற்றும் வகையில் மூன்றாம் கட்ட முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.

இந்த மூன்றாம் கட்ட DAS IIIநவீன டிஜிட்டமயமாதலின் மூலம், இந்தியாவில் 7,000-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் சிறு நகரஙகளில் இருக்கும் 40 மில்லியனுக்கும் அதிகமான இல்லங்களிலும், இன்னும் இவ்வசதியில்லாத பகுதிகளை கொண்டிருக்கும் சந்தையிலும் நுழையும் வகையில் ஒவ்வொரு கட்டமாக திட்டமிட்டு படிப்படியாக சென்றடைய திட்டமிட்டு இருக்கிறது. இந்த புதிய பிரச்சாரமானது, டாடா ஸ்கை, தனது வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவகையில், முழுமையான சேவைகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதுபற்றிய விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதோடு, பழைய அனலாக் முறையில் இருந்து நவீன டிஜிட்டல் டிவி முறைக்கு மாறுவதன் அவசியத்தையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது.

அமோக வரவேற்பைப் பெற்றிருக்கும், பிரபல சினிமா நட்சத்திரம் தனுஷ் நடித்திருக்கும் மூன்று பிரத்யேக விளம்பர படங்களின் மூலம், வழக்கமான அனலாக் இணைப்புகளில் இருந்து மாறுபட்டு,வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக டாடா ஸ்கை அளிக்கும் சலுகைகளை விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் டாடா ஸ்கை அளிக்கும் சேவைகளை முன்வைத்து, மக்களிடையே டிஜிட்டல்மயமாதலின் அவசியம் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்கும் ஒரு முயற்சியாக இப்பிரச்சாரம் அமைந்திருக்கிறது. இந்த பிரச்சாரமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளிவந்து வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த பிரச்சாரமானது, மூன்று முக்கிய கருத்துகளை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது. முதலாவதாக, வாடிக்கையாளர்கள் தாங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நாட்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இரண்டாவதாக, தங்கள் வசதிக்கு ஏற்ற கட்டணத்தைச் செலுத்தும் சுலபமான வாய்ப்பு. மூன்றாவதாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி சேனல்களை மட்டும் தேர்ந்தெடுக்க உதவும் முழுச் சுதந்திரம். ஆகிய இம்மூன்றும் டாடா ஸ்கை வழங்கும் ப்ரத்யேக சலுகைகளாகும்.

டாடா ஸ்கை யின் இந்த புதிய பிரச்சாரத்தின் அறிமுகம் தொடர்பாக, டாடா ஸ்கை தலைமை கம்யூனிகேஷன்ஸ் அதிகாரி திரு. மலாய் தீக்‌ஷித் கூறுகையில், “எங்களது வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான, தேவையான அனைத்தையும், புதுமையான சலுகைகள் மூலம் தொடர்ந்து அளித்துவருவதே எங்களது நோக்கமாகும். மேலும் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வகையில் பல வாய்ப்புகளையும் அளிப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எங்களது இந்த புதிய பிரச்சாரமானது, டாடா ஸ்கையின் டிடிஹெச்-ல் பதிவு செய்து கொள்வதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான டிவி சேனல்களை மட்டும் தேர்ந்தெடுக்க முடியும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும் வழிமுறைகளில் வகையில் கட்டண செலுத்த முடியும் என்பதை முக்கிய அம்சமாக கொண்டிருக்கிறது. மேலும், இந்த மூன்றாம் கட்ட டிஜிட்டல் மயமாதல் முயற்சிகளின் மூலம், இதுவரை டிடிஹெச் சேவைகள் நுழையாத சந்தைகளில் நுழையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதோடு, தனுஷ் நடித்திருக்கும் புதிய விளம்பர படம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதும் சாத்தியமாகி இருக்கிறது” என்றார்.

மற்ற டிடிஹெச் ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது, டாடா ஸ்கை-யானது தென்னிந்தியச் சந்தையில் பெரும் அங்கீகாரத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. மேலும் டாடா ஸ்கை-ன் வளர்ச்சியானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது தொடர்கிறது. இதற்கு காரணம், புதுமையான சலுகைகள், பிராந்திய மொழிகளில் அதிகரித்து கொண்டே போகும் டிவி சேனல்களின் பேக்கேஜ்கள் ஆகும்.

டாடா ஸ்கை தற்போது 384 சேனல்களையும், 11 இண்ட்ராக்டிவ் சேவைகளையும், 6 மூவி ஷோகேஸ் பிரிவுகளையும் அளித்து வருகிறது. மேலும் இந்தியாவின் 14 மொழிகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரியும், நாள் முழுவதும் செயல்படும் வாடிக்கையாளர் சேவை பிரிவையும் கொண்டிருக்கிறது.

டாடா ஸ்கை பற்றி..

2006-ல், டாடா குழுமத்திற்கும், 21-வது செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் மூலம் டாடா ஸ்கை ஆரம்பிக்கப்பட்டது.இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பிற்காக அதிகம் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறது. மேலும் உச்ச தரத்திலான உயர் தொழில்நுட்பத்தை அளிப்பதற்காகவே உலகளாவிய முதன்மை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை தடையில்லாமல் வழங்குவதற்க, வசதியாக நாடு முழுவதும், பல மொழி சேவைகளுடன் கூடிய 24×7 நேர நவீன கால் சென்டர்களையும் கொண்டிருக்கிறது.

டாடா ஸ்கை ப்ராண்ட்டானது பல்வேறு குறிப்பிடத்தக்க மைல்கற்களைத் தாண்டி சாதனைகள் படைத்திருக்கிறது. இத்துறையில் பல பரிசுகளை வென்றதோடு, 2012-ம் ஆண்டு எக்னாமிக் டைம்ஸ் ப்ராண்ட் ஈக்விட்டி பத்திரிகை நடத்திய ‘மிகுந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கும் ப்ராண்ட்கள்’ கருத்துக்கணிப்பில் முதலிடம் பெற்ற டிடிஹெச் ப்ராண்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சமீபத்தில் டாடா ஸ்கை+ ஹெச்டி , 2013-ம் ஆண்டுக்கான டிடிஹெச் பிரிவில் ‘ப்ராடக்ட் ஆஃப் த இயர்’ விருதினை வென்றிருக்கிறது. மேலும் இந்நிறுவனம் 36,000-க்க்கும் மேற்பட்ட நகரங்களில், 14.5 மில்லியனுக்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் கூடிய செயல்பாட்டினை கொண்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இணையத்தில் பார்க்கவும் www.tatasky.com