தமன்னாவும் தரை பெருக்குகிறார்!குப்பை அள்ளுகிறார்!

tamanna-wallpaper-8பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளில் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். ஏராளமான கமல் ரசிகர்களும் இதில் பங்கேற்று ஏரி குப்பைகளை அகற்றினார்கள்.
tamanna-clean-india2tamanna-rdTamanna-Joins-Clean-India-Campaign-1888

 

நடிகை தமன்னாவும், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளார்.
ஒருகாலத்தில் தழையத் தழைய  தமன்னா தரையில்படும்படி ஆடை அணிந்து வந்த போது ‘தரை கூட்டுகிறார் தமன்னா’ என்று வட இந்திய ஊடகங்கள் படம் போட்டு கிண்டல் செய்தன.

இப்போது நிஜமாகவே தமன்னா தரை பெருக்குகிறார். குப்பை கூட்டுகிறார். குப்பை அள்ளுகிறார். நம்புங்கள். அவரும் தூய்மை இந்தியா இயக்கத்தில் மோடியின் வழியில் அணிவகுத்து வந்துவிட்டார்.

மும்பை லோகந்த் வாலாவில் ஒரு பகுதியில் குப்பைகளை கொட்டி போட்டு இருந்தனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசியது நோய்கள் பரவும் அபாயமும் இருந்தது.

நடிகை தமன்னா அந்த பகுதிக்கு துடைப்பத்துடன் சென்றார். குவித்து போடப்பட்டு இருந்த குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் தமன்னாவுடன் இணைந்து குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் தமன்னா ஈடுபடப்போகிறாராம

அழகுமயில் தமன்னா குப்பை குனிந்து  தரை பெருக்கினார். இதைப்பார்த்து விட்டுயாராவது மைதானம்,தெருவெல்லாம் சுத்தமாச்சு மனசு எல்லாம்குப்பையாச்சு என்று யாராவது கவிதை பாடாமல் இருந்தால் சரி.