தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது!

 
  தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரை இட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
” அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த. மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.
 
இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி இடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன்.