தமிழ்ச் சினிமா கதாநாயகன் நீரில்மூழ்கி மரணம்!

kakaka2க க க போ படத்தின் கதாநாயகன் கேசவன்  மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவந்தனர். இன்று காலை எட்டு மணியளவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. க க க போ படத்தை புதுமுக இயக்குநர் விஜய்  என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படபிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நாயகன் மரணமான செய்தி கேட்டு இப்படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் சமீபத்தில் சன் தொலைகாட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதன் ஒளிபரப்பை தன் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே மலேசியா சென்றார். அடுத்த வாரம் இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Pin It

Comments are closed.