தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் விக்ரம்பிரபு!

IMG_9952 சமீபத்தில் சில  ஆண்டுகள் வரை சிவாஜி புரொடக்ஷன்ஸ்,சிவாஜி பிலிம்ஸ் என நடிகர் திலகத்தின் படத்தயாரிப்பு நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்தன. 800 நாட்கள் ஓடி  வரலாற்றுச்சாதனை புரிந்த ‘சந்திரமுகி’ படம் இந்நிறுவனத்தின்  தயாரிப்பு முத்திரை எனலாம்.

தன் தாத்தாவான நடிகர்திலகத்தைத்தொடர்ந்து பேரன் விக்ரம் பிரபு  இப்போது  ஒரு படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். ‘ ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்'(First Artist) என்கிற பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின்  தொடக்க விழா இன்று நடிகர்திலகத்தின் வீடான அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

_MG_3071பத்திரிகையாளர்கள்,திரையுலக நண்பர்கள் சூழ நடந்த இவ்விழாவில் ‘ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ என்கிற நிறுவனத்தின் சின்னத்தை அதாவது ‘லோகோ’வை  மூத்த தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் அறிமுகம் செய்து வைத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு , ‘ ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘நெருப்புடா ‘ என்கிற படத்தின் தலைப்பை அறிமுகம் செய்து வைத்தார்.

பல தலைப்புகள் யோசிக்கப்பட்டு கடைசியில் இதுவே பொருத்தமானதாக முடிவானது.இந்த தலைப்புக்காக கபாலி தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் அனுமதி பெற்றுப் பயன்படுத்தியுள்ளனர்.

இத்திரைப்படத்தை, விக்ரம் பிரபு “சந்திரா ஆர்ட்ஸ்”  மற்றும் “சினி இன்னோவேஷன்ஸ்”  ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த ‘நெருப்புடா ‘   படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார்.நாயகன் ஒரு தீயணைப்புப்படை வீரர். அதுமட்டுமல்ல கதைப்படி அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகரும் கூட. நாயகியாக  நிக்கி கல்ராணி நடிக்கிறார்.பொன்வண்ணன்,நாகிநீடு, “நான் கடவுள்” ராஜேந்திரன்,“ஆடுகளம்” நரேன் ,மதுசூதன் ராவ் ஆகியோரும்  நடிக்கிறார்கள்.

படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் பி.அசோக்குமார்.

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்.இசை: ஷான் ரோல்டன்.கலை இயக்குநர் : வி. பிரபாகரன,  எடிட்டர் : தியாகு,சண்டைப்பயிற்சி : திலிப் சுப்பராயன் ,தயாரிப்பு : விக்ரம் பிரபு,இசக்கி துரை மற்றும்   R.K.அஜெய்குமார்.
_MG_3120‘நெருப்புடா ‘  என்கிற ஒற்றைச்சொல் வசனம் ,கபாலி படத்தின் ட்ரெய்லரிலும் பாடலிலும்  இடம்பெற்று கோடிக்கணக்கான ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் லைன் புரொடியூசராக டைமண்ட் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.தனது மேலாளரான டைமண்ட்பாபுவைப் பிரபு இவ்வாறு  தனது மகன் நிறுவனத் தயாரிப்பில் பங்கேற்க வைத்து உயர்த்தியுள்ளார்.

இளைய திலகம் பிரபு அனைவரையும் வரவேற்றதுடன் அன்னை இல்லத்தின்மீது  எல்லாரும் வைத்துள்ள பாசமும் நேசமும் தொடரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அலங்காரமற்று அன்பு மட்டுமே வழிய வழிய நடந்த இந்த எளிய விழாவில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார்,சந்தானபாரதி,லிங்குசாமி, தயாரிப்பாளர்கள் சிவாஜி  ராம்குமார், எல்.சுரேஷ்,சித்ரா லெட்சுமணன், நடிகர்கள் ஜெயம்ரவி, பொன்வண்ணன்,,உதயநிதி ஸ்டாலின்,நிழல்கள் ரவி,சிபிராஜ், ராஜா ,திருமதி பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.