‘தாதா 87’ விமர்சனம்

 யாராவது தப்பு செய்தால், அதிரடியான தண்டனை கொடுக்கும் தா(த்)தா சாருஹாசனுக்கு நிறைவேறாத காதல் ஒன்று இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் இளம் நாயகன் ஆனந்த் பாண்டி, எந்த பெண்ணை பார்த்தாலும், கண்டதும் காதல் கொண்டு அலைபவர். இப்படிப் பல பெண்களை காதலிப்பவர் நாயகி ஸ்ரீ பல்லவியை மட்டும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்.அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறார்.

ஆனந்த் பாண்டியின் காதலை , ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்வதோடு,  நாயகி தன்னைப் பற்றி திடுக்கிடும் ரகசியம் ஒன்றை சொல்ல, அதைக் கேட்டதும், துரத்தி துரத்தி காதலித்த ஆனந்த் பாண்டி, அவரை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுகிறார். ஸ்ரீ பல்லவியோ அவரை விடாமல் துரத்துகிறார்.

அப்படிப்பட்ட அந்த ரகசியம் என்ன, அந்த ரகசியத்தால் பிரிந்த இணைகளின் காதல் மீண்டும் ஒன்று சேர்ந்ததா, இல்லையா, 87 வயதான தாதாவின் பழைய காதல் என்ன ஆனது என்பது தான், ‘தாத 87’ படத்தின் மீதிக்கதை.

‘தாத்தா 87’ என்று தலைப்பு வைப்பதற்கு பதிலாக ‘தாதா 87’ என்று மறந்து போய் தலைப்பு வைத்தது போல தான் படம் இருக்கிறது. மற்றவர்களைத் தெறிக்கவிடும் படு பில்டப் ரவுடியான சாருஹாசன், ரொம்பவே தளர்ந்து போய் இருக்கிறார். இருந்தாலும், தனது கண்களை மட்டும் அவ்வப்போது உருட்டி…உருட்டி.மிரட்டுகிறார்

படத்தில் தாதாவை விட இளம் ஜோடிகளான ஆனந்த் பாண்டி மற்றும் ஸ்ரீ பல்லவி தான் அதிகமாக வருகிறார்கள். அவர்களது காதலும், அதில் இயக்குநர் வைத்த சஸ்பென்ஸும் சுவாரஸ்யம்.

இளசுகள் இருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும் ஸ்ரீ பல்லவி நடித்த கதாபாத்திரத்தையும், அதில் அவர் காட்டிய ஈடுபாட்டையும் பலமாகவே பாராட்டலாம்.காதல் என்பது  அன்பை பரிமாறிக் கொள்வது, என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வரும் இயக்குநர் விஜய ஸ்ரீ ஜி, பலவிதமான பாதைகளில் பயணித்து தான் சொல்ல வந்ததை பலவிதமாக குழப்பி சொல்லியிருப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.ரஜபாண்டியின் ஒளிப்பதிவும், லியாண்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோரது இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.மொத்தத்தில், இந்த ‘தாதா 87’ வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், அதை சொல்லிய விதத்தால் சுமாரான  படமாக இருக்கிறது.

Pin It

Comments are closed.