திருமணம் விமர்சனம்

சேரன் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்கி இருக்கும் குடும்பப் படம் திருமணம். 
நாயகன் மகேஷ் (உமாபதி), ஆதிரா (காவ்யா சுரேஷ்) ஆகிய இருவரும் காதல் வயப்படுகின்றனர்.ஆனாலும் என்ன? இருவீட்டாரது சம்மதத்தையும் பெற்றுவிடுகின்றனர்.அப்புறம் என்? திருமண தேதியும் முடிவு செய்யப்படுகிறது.பிறகென்ன? இதயங்கள் இணைந்திருந்தாலும் வீடுகள் சும்மா விடுமா? இரு வீட்டாருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்படுகிறது. இதுவே பிரச்னையாகி உரசல்களை ஏற்படுத்துகிறது.அது என்ன பிரச்சினைகள்? அவற்றை எல்லாம் மீறி நாயகனும் நாயகியும் இணைந்தார்களா என்பதுதான்  படத்தின் மீதிக் கதை. சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு. தாராளம் வேறு ,ஊதாரித்தனம் வேறு. இந்த மயிரிழை வேறுபாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் என்ன ஆகும். ?

அப்படி இரு குணச்சித்திரங்களையே கதையின் பிரச்சினை மையம் கொள்ளும் இடமாக்கி வைத்துள்ளார் இயக்குநர் சேரன்.
அப்படிப்பட்ட இரு பாத்திரங்களாக நாயகனின் அக்கா சுகன்யாவும் நாயகியின் அண்ணன் சேரனும் நடித்துள்ளனர்.
 

மசாலாப்படங்களில் வருவது மாதிரிசெயற்கையான திடீர் திருப்பங்கள் எதுவும் இல்லை.ஆற்றோட்டம் போல அதன் போக்கில் செல்கிறது கதை.

காலத்துக்கு ஏற்ப அதாவது குடும்ப உறவுகள் பலவீனப்பட்டுவரும் இக்காலத்துக்கேற்ப சேரன்ஒரு குடும்பக்கதையை அப்டேட் செய்துள்ளார். 

 
திருமணத்தை முன்னிட்டு கடன் வாங்கிச் செலவழித்து விட்டுப் பிறகு கண்ணீருடன் கவலையுடன் காலத்தைக் கழிப் போர் பலருண்டு. 

கல்யாணக் கடனாளிகளுக்கு நல்ல சிந்தனைையைத் தூண்டும் கருத்தைச் சொல்லியிருக்கிறார் சேரன். அது என்ன? என்பது படம் பார்ப்போருக்கான கூடுதல்  போனஸ்.சேரன் இயக்கும் குடும்பப் படம் என நம்பி அவரது ரசிகர்கள் திரையரங்குக்குள் நுழைந்தால், அவர்களுக்கு  ஏமாற்றம் தராமல் தன்பாணியில்  படத்தைக் கொடுத்திருக்கிறார் . 

Pin It

Comments are closed.