திரைப்படக் கல்லூரி இயக்குநர்கள் இணைகிறார்கள்: இயக்குநர் ரமேஷ் செல்வனின் புதிய முயற்சி!

sd-rameshசினிமாத்துறையில் நுழைய பல வருடங்கள் போராட வேண்டி இருந்த காலகட்டம் இப்போது மாறிவிட்டது. முப்பது வருடங்களாக இயக்குநராக வேண்டும் என்று      போராடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எந்த அனுபவமும் இல்லாமல் குறும்படம் எடுத்து அதன் மூலம் கலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இன்று.

அந்த அடித்தளமான குறும்பட ஆர்வலர்களின் புதிய சிந்தனைகள் தான் இன்றைய கலையுலகை வேறு ஒரு பாதைக்கு கொண்டுசெல்கிறது.

திரைப்படங்கள் நம் வாழ்க்கையை, சமுதாயத்தை மாற்றும் வல்லமை படைத்தவை.ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றக் கூடிய சக்தி வாய்ந்தது.அப்படிப்பட்ட ரசனையுள்ளவர்கள் ஒருங்கிணைந்து, திறமையானவர்களை இனம் காண “குறும்படத் திருவிழா”வை நடத்த உள்ளனர்.

விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, சத்யராஜ் நடித்த கலவரம், அருண்விஜய் நடித்த ஜனனம், தலைவன் மற்றும் வஜ்ரம் போன்ற படங்களை இயக்கிய S.D.ரமேஷ்செல்வன்  இந்த குறும்படத் திருவிழாவை நடத்துகிறார்.இந்த விழாவில் 1) R.அரவிந்தராஜ் B.Sc, D.F.Tech.,  2)R.S.இளவரசன் B.Sc, D.F.Tech., 3)J.பன்னீர் B.Sc, D.F.Tech.,         4)N.நாகராஜ் B.Sc, D.F.Tech., 5)நந்தகுமார், 6)R.P.ரவி, 7)கட்டபொம்மன்,   8)ரவிநிவேதன், 9)பாண்டிசெல்வம் போன்ற திரைப்படக்கல்லூரி இயக்குநர்களும்; 1)N.ராகவ் B.Sc, D.F.Tech.,,2)சேவிலோராஜா B.Sc, D.F.Tech., 3)P.சந்திரன்B.Sc, D.F.Tech., போன்ற ஒளிப்பதிவாளர்களும் 1)P.சித்திரைச் செல்வன்B.Sc,D.F.Tech., 2)T.R.ரவிச்சந்திரன், 3)R.சங்கர், 4)K.சிவசங்கர் ஆகிய தயாரிப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த குறும்பட திருவிழா போட்டியில் கலந்து கொள்ளும் 100 படங்களிலிருந்து 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாநில, மத்திய சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விருது போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேலும் திரையரங்குகள் மற்றும் தொலைகாட்சிகளில் குறும்படங்களை வெளியிடப்படும்.

சிறந்த படங்களை எடுத்தவர்களுக்கு “ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ்” நிறுவனத்தால் திரைப்படம் எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கான ஒரு அமைப்பாக “சென்னை தமிழ் பிலிம் பேன்ஸ் சொசைட்டி” செயல்படும் என்றார் இயக்குநர் S.D.ரமேஷ்செல்வன்.