திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் எஸ்.ஏ.ராஜ்குமார் வெற்றி

sar1திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் 2016 –  2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல்   நேற்று  ( 13.03.2016 ) திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

தலைவராக மீண்டும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பொதுச் செயலாளராக டோம்னிக் சேவியர் வெற்றி பெற்றிருக்கிறார். பொருளாளராக பி.ஜி.வெங்கடேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

துணைத் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தினா, ஜெயசந்திரன், டி.கே.மூர்த்தி, பி.செல்வராஜ், திரிநாத் ராவ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்.

இணைச் செயலாளர்களாக பி.வி.ரமணா, எல்.வி.சுதாகர், ரங்கராஜன், செல்வராஜ், பெர்னாட் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த சங்கத்தில் மொத்தம் 525 பேர் உறுபினர்களாக உள்ளனர்.