தில்லுக்கு துட்டு 2 ’ விமர்சனம்

இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில் 2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், 
சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தின் நீட்சியாக வெளியாகியிருக்கும் திகில் படம்தன் இந்த  ‘தில்லுக்கு துட்டு 2’ .

முதல் பாகத்தை காட்டிலும், இந்த இரண்டாம் பாகத்தில் காமெடியும், விறுவிறுப்பும் கூடுதலாக இருக்கிறது.
 நாயகியிடம், யார்? ஐ லவ் யூ சொன்னாலும் அவர்களைப் பேய் அடிக்கும்… அப்படிப்பட்ட நாயகியிடம் ஐ லவ் யூ சொல்லும்  நாயகன்… எப்படி தன் காதலில் ஜெயிக்கிறார்..? என்பதே தில்லுக்கு துட்டு 2 படத்தின் கரு. 

சந்தானம்  கதாநாயகனாக நடித்து ,இப்படத்தை தன்  ஹாண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்   தயாரித்திருக்கிறார்.

 கதாநாயகியாக ஸ்ரிதா சிவதாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, சிவசங்கர் மாஸ்டர், இயக்குநர் மாரிமுத்து, மு.ப.வெங்கடேசன், விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்பிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், டாக்டர் கார்த்திக், பிரசாந்த் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் காமெடி’யில் புகழ் பெற்ற ஐயப்பா பைஜூவும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

 
சந்தானம் ஒரு ஆட்டோ டிரைவர். ஒரு  காலனியில் தனது தாய் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார்.
 அக்காலனியில்  தினமும் மதுவருந்தி வந்து தெருவில்  அவர் செய்யும்  அலப்பறையைத் தாங்க முடியாமல் தவியாய் தவிக்கிறார்கள் காலனிவாசிகள்.

அவதிப்பட்ட அப்பகுதி மக்கள் சந்தானத்தைஏதாவது செய்து இடத்தை காலி பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த சமயத்தில், மலையாள மந்திரவாதியின் மகளான நாயகி ஸ்ரிதா சிவதாஸிடம் ‘ஐ லவ் யு’ சொல்பவர்களை பேய் புரட்டி எடுக்கும் விஷயம் அப்பகுதி மக்களில் ஒருவருக்கு தெரியவர, அவர் இதை பயன்படுத்தி சந்தானத்தை பழிவாங்க நினைக்கிறார்.

அதன்படி, ஸ்ரிதா சிவதாஸையும், சந்தானத்தையும் சந்திக்க வைப்பவர், அப்படியே சந்தானத்திற்கு ஸ்ரிதா சிவதாஸ் மீது காதல் ஏற்பட செய்துவிடுகிறார். சந்தானமும் ஸ்ரிதா மீது உள்ள காதலால், அவரிடம் ஐ லவ் யு சொல்ல, பேய் அவரது வீட்டுக்கே வந்து புரட்டி எடுக்கிறது. அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் சந்தானம், நேரடியாக கேரளாவுக்கே சென்று காதலியின் மந்திரவாதி அப்பாவை எதிர்கொள்ள, அதன் பிறகு நடக்கும் திகில் மற்றும் பித்தலாட்டங்களைக்  கலகலப்பான காமெடியாக சொல்லியிருப்பது தான் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் மீதிக்கதை.

 சந்தானம்,தான் நாயகன்.  அவருக்கே உண்டான ஆக்‌ஷன், ஆட்டம் என்று ஒரு பக்கம் ரசிகர்களை திருப்திப்படுத்தி,  மறுபக்கம் தனது அக்மார்க் காமெடி மூலம் படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். எப்போதும் தனது நக்கலானபஞ்ச் வசனங்களால் சிரிக்க வைக்கும் சந்தானம், இந்த படத்தில் வசனங்களைக் குறைத்துவிட்டு

பேசாமலேயேஅதிகமாகச் சிரிக்க வைத்திருப்பது புதுசு.

படத்தில் கடைசிவரை, சந்தானத்துடன் வரும் நான் கடவுள் ராஜேந்திரன்  கலக்கியுள்ளார்.

 படத்தில் வந்து போகும் பேய்களை போலவே நாயகி. அவ்வப்போது வந்து போகிறார்.  நாயகி அப்பாவாக நடித்திருக்கும் பிபின், ஊர்வசி ஆகியோரது கூட்டணியும் நம்மை குஷிப்படுத்த, சில இடங்களில் நடன இயக்குநர் சிவசங்கர் மற்றும் அவரது சகாக்களும் வருகிறார்கள்.

படத்தில்  இருபொருள் வசனங்கள் இருந்தாலும், அவை பலருக்கு புரியாத படி இருப்பதால், பிழைத்தோம்..

சந்தானம் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனின் காமெடி விருந்தில், வேறு எதையும் கண்டுக்கொள்ள தோன்றவில்லை என்றாலும், தீபக்குமாரின் ஒளிப்பதிவும், ஷபீரின் இசையும் சில இடங்களில் கவனிக்க வைக்கின்றன.

 
 இயக்குநர் ராம்பாலா, நகைச்சுவையுடன்,  திரைக்கதையை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைத்திருக்கிறார்.

 
இப்படி படம் முழுவதும்  இடைவேளையின்றி சிரிக்க வைக்கும் இந்த ’தில்லுக்கு துட்டு 2’  கொடுக்கிற காசுக்குத் தகும்.

 

 

 

Pin It

Comments are closed.