துபாயில் ரசிகர்களைக் குதூகலப்படுத்திய சூர்யா!

surya-dubaiதுபாயில் சி 3 பிரிமீயர் நிகழ்வானது, டான்யூப் ப்ராபர்ட்டிஸ், க்ளியர் வாட்டர், என்.எஸ்.கே பிரிண்ட்ஸ், மலபார் கோலடு & டைமண்ட்ஸ், ஆப்பக்கடை, ப்ளாக் துலிப் ஃப்ளவர்ஸ், புர்வங்கரா, பார்ஸ் ஃபிலிம், கோல்டன் சினிமாஸ், ட் ஹமிழ் 89.4 எஃப்.எம் – அதிகாரப்பூர்வ தமிழ் பார்ட்னர் & கிளப் எஃப்.எம் – அதிகாரப்பூர்வ மலையாளம் ரேடியோ பார்ட்னர் மற்றும் தொலைக்காட்சி பார்ட்னராக சினி டிவி ஆகியோரின் ஆதரவோடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சூர்யா  ரசிகர்களைக் குதூகலப்படுத்தினார்.

எஃப்டிவி மீடியா & அட்வர்டைசிங் எல்.எல்.எசி, 2013 ஆம் ஆண்டில் UAE-ல் தன் செயல்பாட்டை தொடங்கியது. ஒவ்வொரு செயல்பாட்டிலும் கேளிக்கை, சிந்தனை மற்றும் பேரார்வத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்ற எஃப்டிபி-ன் நோக்கமானது, தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் பல்வேறு வகைப்பட்ட சந்தையாக்கல் மற்றும் பிராண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பல்வேறு ஊடக சேனல்கள் வழியாக புதுமையான ஊடகத்தீர்வுகளை வழங்குவதாக இருக்கிறது.

2015 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அதன் செயல்பாடுகளை சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கும் விரிவாக்கம் செய்தது. உணவு சங்கிலித்தொடர் நிறுவனங்கள். ரெஸ்டாரண்டுகள், ரியல் எஸ்டேட், மலர் விற்பனைத்தொழில் பிரிவு, மருத்துவமனைகள் மற்றும் பிற துறைகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஊடக சேவைகளை வழங்குவது எஃப்டிபி-ன் உத்வேகமிக்க பயணத்தில் உள்ளடங்கும் சேவைகளாகும்.

கிரேசி மோகனின் ‘ஆர் யு ரெடி டு கோ கிரேசி’, நித்யஸ்ரீ மகாதேவன் வழங்கிய கிளாசிக்கல் ரெயின் கர்நாடக இசை நிகழ்ச்சி, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பான ‘மீட் த ரெமோ’, சென்னையின் டிஜிட்டல் வடிவத்தில் பாட்ஷா. துபாயில் ‘பைரவா’ படத்தின் உலக பிரிமீயர், நடிகர் விக்ரமுடன் துபாயில் ‘இருமுகன்’ திரைபப்டத்தின் உலக பிரீமியர் மற்றும் சிங்கம் 3 பிரிமீயர் நிகழ்ச்சிக்காக ‘சி யுவர் சிங்கம்’ என்ற பெயரில் ரசிகர்களோடு சூர்யாவின் பிரத்யேக சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகள், எஃப்டிவி வெற்றிகரமாக நடத்திய சமீபத்திய நிகழ்வுகளாகும்.