தென்னிந்திய நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் விஜய்யின் “புலி” டீசர்

puli11

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இளையதளபதி விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் வெகுவாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய்சேதுபதி, சாந்தனு, சிபிராஜ், துல்கர் சல்மான், நிவின்பாலி, விவேக், கன்னட நடிகர் யாஷ், நடிகைககள் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால், நஸ்ரியா, குஷ்பூ, ராதிகா சரத்குமார், இயக்குநர்கள் ஹரி, வெங்கட்பிரபு, அட்லீ, சுசீந்திரன், மனோபாலா, பாலாஜிமோகன், தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி தாணு, ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், யூடிவி தனஞ்செயன், ஏ.ஜி.எஸ். அர்ச்சனா கல்பாத்தி, ஜெ.அன்பழகன், சிவசக்தி பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத், இமான் ஆகியோர் “புலி” டீசரை பாராட்டியுள்ளனர். மேலும், 41வது பிறந்தநாளை கொண்டாடிய இளையதளபதி விஜய்க்கும் அவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனுடன், இந்தி திரையுலகின் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ், புலி பட டீசரில் காணும் போது உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், படத்தில் நடித்த விஜய், ஸ்ரீதேவி ஆகியோருக்கு தனது பாராட்டுகள் என்றும் ட்வீட்டர் மூலம் பாராட்டியுள்ளார்.

புலி படத்தின் டீசர் யு டியூப் இணையதளத்தில் வெளியாகிய ஒரே நாளிலேயே 14 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் புலி படத்தின் டீசர் உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் திரையரங்குகளில் நேற்று இரவு முதல் திரையிடப்பட்டதால், அதைக்காண திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனுடன் தமிழ் தொலைக்காட்சிகளிலும் புலி படத்தின் டீசர் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே ரசிகர்கள், பொதுமக்கள், மற்றும் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் இடையே படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.