தேசிய பெண் குழந்தைகள் தினத்தை  சிறப்பாக கொண்டாடிய வேலம்மாள் பள்ளிக் குழுமம்!

 வேலம்மாள் பள்ளிக் குழுமம் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நிபுணத்துவம் கொண்டு 1,00,000க்கும் மேற்ப்பட்ட மாணவச் செல்வங்களுடன் கம்பீரமாகச் செயலாற்றி வருகிறது.

கடந்த 2018 ஜனவரி 24ம் தேதி சூரப்பேட்டையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பயிலும் ஏறத்தாழ 5000க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இணைந்து, பாலினப் பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி, தரும் நோக்கில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தைத் கொண்டாடினர்.

5000க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளி மைதானத்தில் ஒன்றுகூடி, தம் கரங்களில் வாசக அட்டைகளை ஏந்தி, பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகப் போராடவும், பாலியல் வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளைக் காக்கவும், சமூகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புரிமையை நிலை பெறச் செய்வது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி பெண் குழந்தைகளின் சின்னம் வடிவில் அமர்ந்து தங்களது ஒற்றுமையை பார்வையாளர்களுக்கு சிறப்பாக வெளிப்படுத்தினர்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையில், இப் பள்ளிக் குழந்தைகளின் செயல்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.

இச் செயல்பாடுகள் மூலம், நாட்டில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை, அனைவருக்குள்ளும் உதிக்கச் செய்தனர்.