’தேவராட்டம்’ விமர்சனம் 

கௌதம் கார்த்திக்,மஞ்சிமா மோகன்,சூரி,போஸ் வெங்கட்,வினோதினி வைத்தியநாதன்,அகல்யா வெங்கடேசன்,வேல ராமமூர்த்தி,பெப்ஸி விஜயன்,சந்துரு சுஜன்,ரகு ஆதித்யா நடித்துள்ள படம்.
 
அப்பாவைக் கொன்றவனை, தன் அப்பாவை கொன்றவன்.. அவன்தான் என தெரியாமல் ஊருக்காகவும், நீதி நேர்மைக்காகவும் போட்டுத்தள்ளும் ஹீரோவும்., பெண்களைத் தெய்வமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும், பெண்களை பலாத்காரம் செய்யும் கொடியவர்களை கருவறுக்க வேண்டும் எனும் கருத்தும்தான்  படம்.
சினிமாவில் தனக்கு என்று ஒரு பெரிய இடத்தை பிடிக்க போராடி வரும் கௌதம் கார்த்திக் நடிப்பில் இப்படம் படம் வெளியாகியுள்ளது. கிராமத்துக் கதைகளில் வல்லவரான முத்தையா இயக்கிய இப்படம் எப்படி இருக்கிறது.?
 
ஊரில் எந்த தப்பு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்கின்றார் கௌதம் கார்த்திக். 5 அக்காவிற்கு கடைசி தம்பியாக இருக்கும் இவரை எல்லோரும்  வக்கீலுக்கும் படிக்க வைக்கின்றனர்.தம்பி என்று பார்க்காமல் தங்கள் மகனாக நினைத்து வளர்க்கின்றனர்.
 
அந்த நேரத்தில் பெண்களைத் தவறாக படம்பிடிக்கும் ஒருவனை ஒரு பெண் நடுரோட்டில் செருப்பால் அடிக்க, அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகின்றது, ஆனால், அதை தொடர்ந்து அந்த பெண் கடத்தப்பட்ட பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு, மிக மோசமான நிலைக்கு வருகின்றார்.
 
அந்த கேஸ் கௌதம் கார்த்திக்கு வர, இந்த நாச வேலையை செய்தவன் ஊரில் பெரிய ரவுடியான பெப்சி விஜயன் மகனிடம் உதவி கேட்க, ஒரு கட்டத்தில் கௌதம் கார்த்திக்கும், பெப்சி விஜயன் மகனுக்கு மோதல் ஏற்பட, கௌதம் அவனை நடுரோட்டில் வெட்டி சாய்க்கிறார், பிறகு பெப்சி விஜயன் கௌதமை கொலை செய்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்ட, கௌதம் கார்த்திக்., தடைகளை தவிடு பொடியாக்கி வில்லனைக் கொன்றாரா? அல்லது , வில்லன் முந்திக்கொண்டாரா..? என்பது தான் “தேவராட்டம்” படத்தின் கதை.
 
கௌதம் கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளார், இவருக்கு எப்படி மதுரை பையன் கதாபாத்திரம் செட் ஆகும் என்று நினைத்தால், ஆறடி உயரம் முதல் காட்சியிலேயே தப்பு செய்தவர்களை அடித்து பறக்கவிடுவது, மதுரை பளபளக்குது பாடலுக்கு இறங்கி ஆடுவது என கச்சிதமாக பொருந்துகிறார்.
 
மஞ்சிமாவிற்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கதையுடன் அவர் காட்சிகள் வருவது ரசிக்க வைக்கின்றது, சூரியின் காமெடி பல நாட்களுக்கு பிறகு சிரிக்க வைக்கின்றது, கௌதமின் மாமாவாக அவர் மட்டுமில்லாமல், மேலும் இருவர் செய்யும் கலாட்டா, கவுண்டர் என முதல் பாதி சில மணி நேரம் கலகலப்பாக்குகின்றனர்.
 
பசி தெரியாத வளர்க்கணும்னு நினைச்சோம், இப்படி பயம் தெரியாம வளர்ந்துட்ட, என்று தன் தம்பிக்காக பாசத்தை பொழியும் அக்கா, அவருடைய கணவர் போஸ் வெங்கட் என அனைவருமே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், செண்டிமெண்டிற்குப் பஞ்சமில்லை.
 
படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை, மதுரையை அப்படியே கண்களில் காட்டிய ஒளிப்பதிவு, அதை விட பாடல்கள் பின்னணி இசை என நிவாஸ் பிரசன்னாவின் இசை பட்டையை கிளப்புகின்றது.படத்தின் முதல் பாதில் நல்ல விறுவிறுப்பாகவே செல்கின்றது.
 
செண்டிமெண்ட் காட்சிகள், எந்த காலத்திலும் ஒர்க் அவுட் ஆகும் என்பதற்கு  இப்படமே சான்று.
 
படத்தில் தங்கள் சாதியை உயர்த்திப் பிற சாதிகளை குற்றம் குறை சொல்லாமல் சமூக பிரக்ஞையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சிப்படுத்தல்களும் ரசனை. 
 
சூரி ரொம்ப நாட்களுக்குப் பிறகு சூரியை திரையில் காண முடிவது அதுவும் அவரது  துணுக்குத் தோரணங்களுடன் காணமுடிவது சிறப்பு! 
 
எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நாயகனின் அப்பாவாக ஆரம்ப ஒன்றிரண்டு சீன்களிலேயே வந்தாலும் மதுரை பக்கத்து முரட்டு சுபாவ மனிதராக மிரட்டுகிறார். வில்லனாக பெப்ஸி விஜயன் வித்தியாசம் காட்டியிருக்கிறார் . நாயகரின் மூத்த அக்கா மாமாவாக வரும் போஸ் வெங்கட் உருகுகிறார் , நம்மை உருக்குகிறார், சூரி மாதிரியே நாயகரின் அக்கா மாமாக்களில் ஒருவராக வரும் சரவண சக்தியும் தன் பங்கிற்கு சாமிக்கு படைக்க வைத்திருந்த சரக்கை எடுத்து குடித்து விட்டு செய்யும் அலப்பறை சிரிப்பு வெடி! 
 
மேலும் , நாயகரின் மூத்த அக்காவாக வினோதினி வைத்தியநாதன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்டோரும் கச்சிதம் .தெய்வமாக இளம் வில்லனாக பெப்ஸி விஜயனின் மகனாக வரும் சந்துரு சுஜனும் பதினைந்து நாட்கள் அந்தப் பெண்ணை படுபாதக பலாத்காரம் செய்யும் இளைஞன் முன்னாவாக வரும் ரகு ஆதித்யாவும் கூட பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர் 
 
 “தேவராட்டம்” எனும் ஒரு சாதி பெயரில் இப்படம் வெளிவந்து இருந்தாலும் எந்த ஒரு ஜாதியையும் உயர்த்தவோ தாழ்த்தவோ இல்லாது மொத்த கதையும் களமும் பின்னப்பட்டுள்ளது! 
 
 முத்தையா தனது எழுத்து, இயக்கத்தில் படம் முழுக்க கத்தி, வேல் கம்பு , ரத்த தெறிப்பு … என காட்டியிருந்தாலும் மதுரை மண்ணுக்கே உரிய பாச நேசத்தையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டத் தவறவில்லை…!  கிளைமாக்சில் சொல்லி இருக்கும் “பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டும், பெண் பிள்ளைகளை பலாத்கரம் செய்பவர்களை கருவறுக்க வேண்டும் எனும் மெசேஜிற்காகவே “தேவராட்டம் “திரைப்படத்தை  கொண்டாடலாம்! 
 
“தேவராட்டம் ‘-  ஆக்ஷன் ‘கொண்டாட்டம் ! 
Pin It

Comments are closed.