தேவ தூதனாக மாறிய தீயணைப்பு வீரர் இந்திய ஓவியரின் பதில் மரியாதை!

sree2விபத்தில் சிக்கிய துபாய் விமானத்தில் 275 இந்தியர்கள் 282 விமான பயணிகள் 12 விமான ஊழியர்கள் என 300  பேரை காப்பாற்றி தன்னுயிரை கொடுத்தவர்  ஜாஸிம் இஸ்ஸா முகமத் ஹாசன் என்ற தீயணைப்பு வீரர் .

இவரின் சாதூர்யமான நடவடிக்கையால் விமான பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். இதில் பெரும் எண்ணிக்கையில் பயணம் செய்தது இந்தியர்கள் என்பது குறிப்பிடதக்கது.

sreeder1இந்தியர்கள் உட்பட விமானத்தில் பயணம் செய்த அனைவர் உயிரையும் மொழி, இனம், தேசம், மதம் என எதையும் பார்க்காமல் மனிதம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு காப்பாற்றியதோடு இந்த வீர செயலில் தன்னுயிரை கொடுத்த தீயணைப்பு வீரர்  ஜாஸிம் இஸ்ஸா முகமத் ஹாசனுக்கு மரியாதை செலுத்தும்விதமாக பிரபல ஓவியர் ஸ்ரீதர் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

ஜாஸிம் இஸ்ஸா முகமத் ஹாசன் தேவ தூதன் போலவும் அவரது கரங்களில் ஒரு விமான பின் பகுதியும், அதன் முன் பகுதி இந்தியா போலவும் வரையப்பட்டுள்ளது. நாடே அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறது.