தொடர்ந்து தரமான படங்கள் வழங்க விரும்பும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்!

jsk-solo.rsஒரு  வருடம்தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம்அல்ல. உழைப்பும், தேர்ந்துஎடுக்கும் திறனும் கூடகாரணமாக இருக்கலாம்.ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது. 2013 ஆண்டில்’தங்கமீன்கள்’ இந்தியன் பனோராமா,தேசியவிருது, சென்னை சர்வதேச திரைப்படவிழா ஆகிய விழாக்களில் அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வென்றதைப் போல 2014 ஆம் ஆண்டின் கௌரவத்தையும், அங்கீகாரத்தையும் ‘குற்றம்கடிதல்’ படம் வென்று இருக்கிறது. புதிய இயக்குநர் பிரம்மாஜி  இயக்கத்தில் பெரும் பெயரும் புகழும் பெற்ற ‘குற்றம்கடிதல்’ திரைப்படம் இந்தியன் பனோரமா, சென்னை சர்வதேச திரைப்படவிழா ஆகிய திரைபடவிழாக்களில் பெரும் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.

‘ என்னுடையபடநிறுவனமான ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தொடர்ந்து தரமான படங்கள் வழங்கி பெரும் மதிப்பு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இந்தியன் பனோரமாவைத் தொடர்ந்து தற்போது சென்னை  சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்தபடமாகதேர்ந்து எடுக்கபட்டதில் எனக்கு மிக்க பெருமை.கடந்தவருடம் தங்கமீன்கள் பெரும் பெயரையும் புகழையும் பெற்றதைப் போல, இந்த வருடம் குற்றம் கடிதல் பெற்று வருவதில் பெரும் மகிழ்ச்சி.வெற்றி பெறுவது ஒரு வாடிக்கையாக இருப்பதும் பெருமை. இந்தப் பெருமையே எனக்கு மேலு ம்இத்தகைய படங்களைத் தயாரிக்க உத்வேகமாக இருக்கிறது.ஹோல்லிவுட் நிறுவனமானR V  Weinstein நிறுவனம் எப்படி விருதுகளுக்கான படங்களைத் தயாரித்துப் புகழ்பெற்றதோ அத்தகைய புகழை என் நிறுவனமும் அடையும்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார் சதீஷ்குமார். இவர் மாதிரி தயாரிப்பாளர்கள் நினைத்தால் நாலு பாட்டு நாலு பைட்டு பார்முலா கொடுமைகளிலிருந்து நம் சினிமாவைக் காப்பாற்றலாம்.செய்வார்களா?

jsk-cifi