தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம்

seemanதொடர்வண்டித்துறையைத் தனியார்வசம் ஒப்படைக்க மத்தியஅரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம்தமிழர்கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

எளிய அடித்தட்டு மக்களின் பயணங்களுக்குப் பயன்படும் தொடர்வண்டித்துறையில் நூறுவிழுக்காடு அந்நிய முதலீட்டுக்குள் கொண்டுவர மத்தியஅரசு முடிவுசெய்திருப்பது மிகவும் அபத்தமானது; ஆபத்தானது.

தரைவழி தொடங்கி விமானவழியிலான பலபணிகளை த்தனியார்வசம் ஒப்படைத்திருக்கும் மத்தியஅரசு, பொதுத்துறையில் இயங்கிவரும் தொடர்வண்டித்துறையையும் தனியார்வசம் ஒப்படைக்கத் துடிப்பது மக்கள்நலனுக்கு முற்றும் எதிரானசெயல். தொடர்வண்டியில் பயணிக்கும் மக்கள்சொகுசான வசதிகளை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே இத்தகையமுடிவை எடுத்திருப்பதாக மத்தியஅரசுசொல்கிறது. ஏழைஎளியமக்களில் எவரேனும் சொகுசுப்பயணத்துக்கு ஆசைப்பட்டது உண்டா? அத்தியாவசியப் பயணத்துக்கு அடிப்படை வசதிகள் இருந்தாலே போதும் என்கிற நிலையில், மக்களின் எண்ணத்துக்கு சற்றும் ஒத்துவராத கருத்தை முன்னிறுத்தி, தனியார்வசம் ஒப்படைக்க நினைப்பது மக்களை அடிமுட்டாளாக்கும் முடிவு. தொடர்வண்டிகளில் சொகுசானவசதிகள் இல்லை என இந்தநாட்டில் எங்கேனும் மக்கள் போராடியிருக்கிறார்களா? எதன்அடிப்படையில் மத்தியஅரசு இப்படிசிந்திக்கிறது?

நாங்கள் ஊருக்குப்போகத்தான் நினைக்கிறோமே தவிர, உல்லாசம் போக நினைக்கவில்லை. தொடர்வண்டித்துறையை உலகத்தரத்துக்கு அரசுஉயர்த்துகிறோம் எனச் சொல்கிறது மத்தியஅரசு. நீங்கள் உலகத்தரத்துக்கெல்லாம் நடத்தவேண்டாம்;  உள்ளூர்தரத்துக்கே நடத்துங்கள். அதை ஒழுங்காக நடத்தினால் எங்களுக்குப் போதும்.

தொடர்வண்டித்துறையை தனியார்வசம் ஒப்படைத்தால்தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டமக்களில் எவரேனும் அங்கேவேலை வாய்ப்புப்பெற முடியுமா? பொதுத்துறையா கஇருக்கும்காலகட்டத்திலேயே தமிழர்களை ஒப்பந்தக்கூலிகளாக மட்டுமே வைத்துக்கொண்டு, நிரந்தரப்பணி வாய்ப்புகளை வழங்காமல் இழுத்தடிக்கும் தொடர்வண்டித்துறை, தனியார் கைவசமானால் என்னகதியாகும் என்பதைசொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏற்கெனவே கல்வி, மருத்துவம் என பலதுறைகளிலும் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டைநாங்கள் இழந்துவரும் நிலையில், ஒரே பொதுத்துறை நிறுவனமான தொடர்வண்டித்துறையிலும் நாம் போராடிப்பெற்ற இடஒதுக்கீட்டை இழக்கவேண்டிய அபாயம் உருவாகும்.

ஆக்கபூர்வ வசதிகளைத் தனியார்வசம்ஒப்படைத்தால்தான் செய்யமுடியும் எனமத்தியஅரசு நினைக்கிறதென்றால், எதற்குஇந்தஅரசாங்கம்? மாபெரும் சர்வவல்லமை கொண்டஓர்அரசால் செய்யமுடியாததை தனியார்முதலாளிகள் செய்கிறார்கள் என்றால், இந்தஅரசாங்கத்தின் கையாலாகாததனத்தை என்னவென்றுசொல்வது? தான் செய்யமுடியாத ஒன்றைத்தனியார் செய்கிறதென்றால், அது இந்தஅரசாங்கத்துக்கு      இழுக்கு இல்லையா? அதனை உணராமல் சொகுசுக்கு வழிசெய்கிறோம் என்கிறபெயரில்தனியார் முதலாளிகளை                   குட்டிஅரசாங்க ஆட்களாகமாற்றும் நடவடிக்கைகள் எவ்வளவுமோசமானவை? மக்களுக்கும் பெரும்தனியார் முதலாளிகளுக்கும் இடையில் வெறும் தரகர் வேலைபார்ப்பதுதான்அரசின்வேலையா? எல்லா வேலைகளையுமே தனியாரேசெய்யும் என்றால், அரசின் வேலைதான்என்ன?

சாலைமேம்பாட்டுத் திட்டங்களை த்தனியாருக்கு ஒப்படைத்ததன்மூலமாக சுங்கச்சாவடிவசூல்என்கிற பெயரில்தனியார் முதலாளிகள்நடத்தும்ஆணவத்தனமான கொள்ளைகளும்அடாவடிகளும் கொஞ்சமா நஞ்சமா?  நிலைமைஅப்படியிருக்க, மிகப்பெரிய பொதுத்துறையான தொடர்வண்டித்துறையைத் தனியார்வசம்ஒப்படைத்தால் கட்டணம் தொடங்கி பணிவாய்ப்புகள் வரைஎத்தகைய அடாவடிநடவடிக்கைகளை மக்கள்எதிர்கொள்ள  வேண்டியிருக்கும் என்பதை மத்தியஅரசு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கும் எளியமக்களின் பயணத்துக்கு ஒரேஆதாரமாகஇருக்கு ம்தொடர்வண்டித்துறையை ஒருபோதும் தனியார்வசம் ஒப்படைக்கக்கூடாது. மக்களின் மனஉணர்வுகளையும் மீறிதொடர்வண்டித்துறையில் அந்நியதலையீடுகொண்டு வரப்படுமேயானால்,மிகக்கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க நாம்தமிழர்கட்சி தயங்காது. மொத்த தமிழகமக்களையும் திரட்டி மத்தியஅரசின் குடுமியைஉலுக்கும் விதமாகக் கடுமையான போராட்டங்களை நாம் தமிழ ர்கட்சி நடத்தும்.

இவ்வாறு அந்தஅறிக்கையில்செந்தமிழன்சீமான்கூறியுள்ளார்