‘தோழா’ படம் என்ன சொல்கிறது?

SRI_5119_atest26144நட்பின் ஆழம் என்ன என்பதை மனித குலம்  தோன்றிய நாளில் இருந்தே ஆராய்ச்சிகள் கூட கூறாத பதிலை ‘தோழா’ திரைப் படம் கூறுகிறது.

நாகார்ஜுனா கார்த்தி இணைப் பிரியாத நண்பர்களாக  நடித்து நாளை வெளி வரும் ‘தோழா’ படத்தில் இந்த வினாவுக்கான விடை கிடைக்கிறது. ‘தோழா’ படத்தின் நீளமே நட்பின் ஆழம் என்கிறார்கள்  படக் குழுவினர். இரண்டு மணி நேரம் , முப்பத்தி ஐந்து நிமிடம், பதினைந்து வினாடிகள் நீடிக்கும் ‘தோழா’, குடுமபத்தோடு  சென்று  ரசிக்கும் படமாக இருக்குமாம்.

படத்தைப் பார்த்தவர்களின் கருத்துப் படி ‘தோழா’ நண்பர்கள் உள்ளவர்களுக்கும் , நட்புக்கு  ஏங்குபவர்களுக்கு  மட்டுமே என்பது தான். ஆகவே இந்தப் படம் சகல வயதினருக்கும் ஏற்ற படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.எல்லாரையும்  கவரும் வண்ணம் படமாக்கப் பட்டுள்ள ‘தோழா’  திரைப் படத்துக்குக் கிடைத்துள்ள வரி விலக்கு இந்தப் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.