த்ரிஷா ஒரு மோகினி!

சூப்பர் ஹிட் படமான சூர்யா நடித்த “சிங்கம் 2” படத்தை  தயாரித்தவர் எஸ். லட்சுமண் குமார். இவரின் “ சிங்கம் 2 “ பட நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “ மோகினி “.
 
3shaநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். த்ரிஷாவின் சினிமா வரலாற்றில் இப்படம் முக்கிய பங்குவகிக்கும். மேலும் சுகன்யா , கௌசல்யா , முகேஷ் திவாரி , யோகி பாபு , சாமி நாதன் , ஆர்த்தி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
 
நம்பர் ஒன்  இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராக பனிபுரிந்தவர் R. மாதேஷ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்த “மதுர” படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார். 
 
இசை :- விவேக் மெர்வின் ( புகழ் இசையமைப்பாளர் ) 
ஒளிப்பதிவு :- ஆர்.பி. குருதேவ் 
படத்தொகுப்பு :- விவேக் ஹர்ஷன்
ஸ்பெஷல் எபக்ட்ஸ் :- Harry Potter படத்திற்கு VFX செய்த லண்டனை சேர்ந்த பிரபல VFX குழுவினர் இப்படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸில் பணியாற்றவுள்ளனர்.
கலை :- பாலா 
நிர்வாக தயாரிப்பு :- கே.வி. துரை 
தயாரிப்பு :- லட்சுமண் குமார்
 
 இதன் படபிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி முதல் லண்டனில் ஆரம்பமாகிறது தொடர்ந்து 40  நாட்கள்  நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியாவில் 20  நாட்களும் , பாங்காகில் 10 நாட்களும் ,                   மெக்சிகோவிலும் நடைபெறும். 
 
ஹாரர் த்ரில்லர் படமாக இப்படத்தை உருவாக்குகிறார் R. மாதேஷ்