நடிகர் சிவகுமாரின் அடுத்த அரிய முயற்சி : 75 வயதிலும் இலக்கிய சாதனை

sivakumar-fbகம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் நடிகர் சிவகுமார்  சொற்பொழிவு நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதன் பிறகு இப்போது ‘மகாபாரதம்’ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஒரு கல்லூரியில் நிகழ்த்தியிருக்கிறார். அந்த உரை விஜய் டிவியில் வரும் 16. ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வுரை சிடி வடிவிலும் வரவுள்ளது.

இவ்வுரை பத்திரிகையாளர்களுக்காகவும் விஐபிக்களுக்காகவும்  ஃபோர் ப்ரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்தச் சொற்பொழிவை ‘தினத்தந்தி’ ஐ, சண்முகநாதன்,ஞாநி,’மக்கள் குரல்’ ராம்ஜி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் . எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஸ்டாலின் குணசேகரன், நடிகர் பார்த்திபன் , திரை ஆய்வாளர் சந்தான கிருஷ்ணன், டாக்டர் கமலா செல்வராஜ்,கவிஞர்கள் மு.மேத்தா,அறிவுமதி, யுகபாரதி, ஓவியர் மணியம் செல்வன், சினிமா தயாரிப்பாளர் திருப்பூர் மணி, இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர் மற்றும் பல வி.ஐ.பிக்களும் கண்டுரசித்தார்கள்.

இம்முயற்சி தொடர்பாக நடிகர் சிவகுமாரிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர்.’ மகாபாரதம்’ உரை முன் தயாரிப்பு அனுபவம் பற்றிப் பேசிய சிவகுமார்,

‘கம்பராமாயணம்’ இந்தியப் பெருங்கடல்போன்றது என்றால் ‘மகாபாரதம்’ பசிபிக் பெருங்கடல் போன்றது. கம்பராமாயணத்தை இரண்டே வரியில்கூட சொல்ல முடியும் மகாபாரதத்தை அப்படிச் சொல்ல முடியாது.அதில்  ஏராளமான கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள் உண்டு. மகாபாரதத்துக்கு தமிழில் உள்ள நூல்கள் பெரியவை. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, வில்லிப்புத்தூரார் எழுதிய பாரதம், சோ எழுதிய மகாபாராதம் பேசுகிறது போன்றவை அளவில் பெரியவை.

அந்த நூல்கள் பல ஆயிரம் பக்கங்களில் இருந்தன.  ‘மகாபாரதம்’பற்றிநிகழ்த்தி வருபவர் சொற்பொழிவு இளம்பிறை மணிமாறன். அவர் மணிக்கணக்கில் பேசக் கூடியவர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஆற்றல் கொண்டவர். அவர் பேசிய 10–12 நிகழ்ச்சிகளின் சிடிகளைக் கேட்டேன். பி.ஆர்.சோப்ராவின் ‘மகாபாரதம்’ டிவி தொடர் இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பானவை பலஅத்தியாயங்கள் கொண்டவை. சுமார் 70 மணிநேர ம் ஓடும் .அந்தக்  கேசட்டுகளை வாங்கிக் குறிப்பெடுத்தேன் இந்த முயற்சியில் இளம்பிறை மணிமாறனை வழிகாட்டியாகக் கொண்டேன். குறிப்பெடுத்து தயாரிக் கப்பட்ட உரையான இதை பாமரனுக்கும் புரியும் வகையில்தான் பேசினேன்.

நான் நடைப் பயிற்சி போகும் போது இதைப் பலரிடம் பேசிக்காட்ட முயன்றிருக்கிறேன். பாதி பாதி பேசிக் காட்டியிருக்கிறேன். பேச ஆரம்பித்து பலரை நான் தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறேன். இருந்தாலும்  பேராசிரியர்கள் உள்பட சிலரிடம் மட்டும்  முழுதாகப் பேசிக் காட்டியுள்ளேன்.”என்றார்