நடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து  நடிகர் சிவகுமார் இரங்கல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி!

குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடமிட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.

16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு , வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் கவிக்குயில் , மச்சான பார்த்தீங்களா  , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை .சிவகாசி பக்கம் அவரின் பூர்வீகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்க்கை   முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

–  நடிகர் சிவகுமார்

 

Pin It

Comments are closed.